எம்பேசு (EMBASE for Excerpta Medica data) என்பது ஆய்விதழ்களின் உயிரியல் மருத்துவ, மருந்தியல் நூலியல் தரவுத்தளமாகும். இது உரிமம் பெற்ற மருந்து ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்க தகவல் மேலாளர்களுக்கும் மற்றும் மருந்தியல் கண்காணிப்பாளர்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்செவியரால் தயாரிக்கப்பட்ட எம்பேசு, 1947 முதல் அண்மையில் வெளியிடப்பட்ட 8,500க்கும் மேற்பட்ட ஆய்விதழ்களிலிருந்து 32 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகளைக் கொண்டுள்ளது.[1] இதன் பன்னாட்டு அணுகல் தினசரி புதுப்பிப்புகள், எம்ட்ரீயில் மருந்து குறியீட்டு மூலம், வெளியிடப்பட்ட மருந்து குறித்த ஆய்வுத் தகவல்களைக் கண்காணிக்கவும் மீட்டெடுக்கவும் எம்பேசு உதவுகிறது. ஒவ்வொரு பதிவும் முழுமையாகக் குறியிடப்பட்டுள்ளன. ஆய்வுப்பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகள் சில பதிவுகளுக்கு முழுமையாகக் கிடைக்கின்றன. முழுக் குறியீட்டிற்கு முன்னதாக அனைத்துப் பதிவுகளுக்கும் செயல்முறை கிடைக்கிறது. எம்பேசின் பன்னாட்டு உள்ளடக்கம் 95 நாடுகளிலிருந்து உயிர்மருத்துவ ஆய்வுப் பத்திரிகைகளில் விரிவடைகிறது. பல தரவுத்தள விற்பனையாளர்கள் மூலமும் கிடைக்கிறது.[2]

எம்பேசு
Producerஎல்செவியர் (நெதர்லாந்து)
History1947–முதல்
Access
Costசந்தா
Coverage
Disciplinesமருத்துவம்
Record depthஅட்டவணை
Format coverageஆய்விதழ் கட்டுரைகள்
Temporal coverage1947–முதல்
Geospatial coverageஉலகம் முழுவதும்
Update frequencyதினமும்
Print edition
Print titleஎக்செர்ப்டா மெடிகா (எம்) ஆய்விதழ் சுருக்கம்
Links
Websiteelsevier.com/embase

வரலாறு

தொகு

1946ஆம் ஆண்டில், எம்பேசு தொடங்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மருத்துவ அறிவு, ஆய்வு அறிக்கைகளின் பதிப்புகளை ஊக்குவித்த இடச்சு மருத்துவக் குழுவால் எக்செர்ப்டா மெடிகா உருவாக்கப்பட்டது. உடற்கூற்றியல், நோயியல், உடலியல், உள் மருத்துவம், பிற அடிப்படை மருத்துவச் சிறப்புப் பிரிவுகள் 13 சேர்க்கப்பட்டன. இந்தத் தரவுத்தளம் 1972-இல் எல்செவியருடன் இணைக்கும் வரை நீடித்தது.

1972ஆம் ஆண்டில், எக்செர்ப்டா மெடிகா எல்செவியருடன் சேர்ந்து 1975ஆம் ஆண்டில், எம்பேசு (எக்செர்ப்டா மெடிகா தரவுத்தளம்) தரவுத் தளத்தினை உருவாக்கியது. இது ஆய்வுச் சுருக்கங்களுக்கான மின்னணு அணுகலை வெளியிட்டது. எம்பேசு பயனர் சமூகத்தின் பின்னூட்டக் கருத்துக்களைத் தொடர்ந்து, எம்பேசு கிளாசிக் எனத் தனி தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது 1947 முதல் 1973 வரையிலான மருத்துவ ஆய்விதழ்களின் பின் கோப்பாக எம்பேசினைப் பூர்த்தி செய்கிறது. இது அந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள், பாதகமான விளைவுகள், அகச்சேர்மங்கள் போன்றவற்றின் மதிப்புமிக்க ஆவணங்களைக் கொண்டுள்ளது.[3]

2010ஆம் ஆண்டில், எம்பேசுவினைத் தவிர, எக்செர்ப்டா மெடிகா எல்செவியரால் ஓம்னிகாம் குழுமத்திற்கு விற்கப்பட்டது.[4]

தற்போதைய நிலை

தொகு

28 மில்லியன் அறிக்கைகளுக்கு மேலதிகமாக, எம்பேசின் தரவுத்தளம் ஒவ்வொரு ஆண்டும் 900,000க்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தரவுகளின் விகிதத்தில் சீராக உயர்கிறது.[5] வெளியிடப்பட்ட எந்தவொரு உயிரியல் மருத்துவ அல்லது மருந்து தொடர்பான தகவல்களையும் மீட்டெடுக்க இந்த பரந்த தகவல் தொழில்முறை, கல்விச் சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, ஆர்எஸ்எஸ் ஊட்டமும் மின்னஞ்சல் தகவல் முறையும் செயல்படுத்துவது போன்ற தனிப்பட்ட அனுபவத்திற்கான மேலும் தனிப்பயனாக்கத்தை எம்பேசு அனுமதிக்கிறது. புதிய மருந்து, நோய்த் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால், விரிவான, நம்பகமான தகவல் ஆதாரத்தை வழங்க எம்பேசு தினசரி புதுப்பிக்கப்படுகிறது.

மேலும் காண்க

தொகு
  • கல்விசார் தரவுத்தளங்கள் மற்றும் தேடுபொறிகளின் பட்டியல்
  • குறியீட்டு மருத்துவம்
  • மெட்லைன்
  • கோக்ரேன் நூலகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Embase". Embase. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.
  2. Embase, Elsevier
  3. "Backfile reveals biomedical history". Europa Science. பார்க்கப்பட்ட நாள் 2014-05-03.
  4. "Omnicom acquires division of Reed Elsevier - BusinessWeek". Archived from the original on 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-02-15.
  5. "Embase: What is it and why is it needed?" (PDF). Elsevier B.V. பார்க்கப்பட்ட நாள் 2014-05-12.

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்பேசு&oldid=4179846" இலிருந்து மீள்விக்கப்பட்டது