இடச்சு மக்கள்
ஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள் (Dutch, இடச்சு: ⓘ), அல்லது நெதர்லாந்தர் (Netherlanders) எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும்.[15][16][17][18][19] இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய குடியேற்ற சமூகங்களில், குறிப்பாக அரூபா, சுரிநாம், கயானா, குராசோ, அர்கெந்தீனா, பிரேசில், கனடா,[20] ஆத்திரேலியா,[21] தென்னாப்பிரிக்கா,[3] நியூசிலாந்து, அமெரிக்கா.[22] ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். 28–29 மில்லியன்[1] | |||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||||||
நெதர்லாந்து 13,226,829[2] (ethnic Dutch and Frisians) | |||||||||||||||||||||||
தென்னாப்பிரிக்கா | 7,000,000[a] (இடச்சு வம்சாவளி)[3] | ||||||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா | 4,533,617 (இடச்சு வம்சாவளி)[4] | ||||||||||||||||||||||
பிரான்சு | 1,000,000 (இடச்சு வம்சாவளி)[5] | ||||||||||||||||||||||
கனடா | 1,000,000 (இடச்சு வம்சாவளி)[5] | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||||||
இடச்சு இலிம்பூர்கு மேற்கு பிரீசியம் (பிரீசியர்) ஆபிரிக்கான மொழி (ஆப்ரிகானர்) கீழ் சாசிய தச்சு மொழி | |||||||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||||||
வரலாற்று ரீதியாக: பெரும்பான்மையானோர் சீர்திருத்தத் திருச்சபை[b] சிறுபான்மை கத்தோலிக்க திருச்சபை இன்று:[14] பெரும்பான்மை சமயமற்றோர் கிறித்தவ சிறுபான்மையினர்[c] | |||||||||||||||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||||||||||||||||||
other செருமானிக் மக்கள்s (குறிப்பாக ஆப்ரிகானர், பிளமிங்குகள், பிரீசியர்கள்) |
ஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின.[23] ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது.[24] இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது.[25] குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இடம்பெற்றன.
இடச்சு மக்கள் பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தின் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றனர். அத்துடன் நவீன பொருளாதாரம், சமய சார்பின்மை, கட்டற்ற சந்தைமுறை போன்றவற்றால் மேற்குலகின் சக்திகளில், குறிப்பாக பிரித்தானியப் பேரரசு, மற்றும் அவர்களது பதின்மூன்று குடியேற்றங்கள் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தனர்.
இடச்சு பாரம்பரிய கலை, கலாச்சாரம் நாட்டார் பாடல், நடனங்கள், கட்டிடக்கலைப் பாணிகள், உடைகள் போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இவற்றில் பல உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இடச்சு ஓவியர்கள், குறிப்பாக ரெம்பிரான்ட், யொஹான்னெஸ் வெர்மீர், வின்சென்ட் வான் கோ ஆகியோர் உலக அளவில் பெரிதும் புகழப்பட்டவர்கள். இடச்சுக்களின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து) ஆகும். ஆனாலும், இன்றைக காலத்தில் பெரும்பான்மையானோர் சமய சார்பற்றவர்களாக உள்ளார்கள். இடச்சுக்களில் பெருமாலானோர் மானுடம், அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு அல்லது தனிமனிதத்துவம் ஆகியவற்றுக்கு ஆரவாக உள்ளனர்.[26][27]
வரலாறு
தொகுகிபி முதலாம் நூற்றாண்டுகளில் செருமானிக் மக்கள் தலைமைகள் இல்லாத பழங்குடி சமூகங்களை உருவாக்கினார்கள். போர்க் காலங்களில் மட்டும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் செருமானிக்க புறச்சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பொது செருமானிக் மொழியைப் பேசி வந்தார்கள். 500களில் மேற்கு நோக்கிய குடியேற்றம் நிறைவடைந்ததை அடுத்து, பெரும் கூட்டமைப்புகள் (பிராங்குகள், அலமான்னிகள், சாக்சன்கள்), உரோமைப் பேரரசு சரிய ஆரம்பித்த வேளையில், செருமானிக் சமூகங்களிடையே பல தொடர் மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றில் முக்கியமாக கிறித்தவமயமாக்கம், மன்னராட்சியுடன் கூடிய புதிய அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மேலே விவரிக்கப்பட்ட பொது நிலைமை, பெரும்பாலான நவீன ஐரோப்பிய இனக்குழுக்கள் செருமானிய பழங்குடியினர்களிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பிரீசியர், செருமானியர், ஆங்கிலேயர் மற்றும் வடக்கு செருமானிக் (இசுக்காண்டிநேவிய) மக்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். தாழ்ந்த நாடுகளில், பிராங்குகள், பல சிறிய பழங்குடி சமூகங்களாக உரோமைப் பேரரசின் வடமேற்கு மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியபோது இந்த கட்டம் தொடங்கியது. இறுதியாக, கிபி 358 இல், பிராங்குகளின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றான சேலிய பிராங்குகள்[28] தென் நிலங்களில் ஃபோடராட்டி என்ற பகுதிகளில் குடியேறினர்.[29]
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Based on adding together ஆப்ரிகானர் and Coloured populations.
- ↑ இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர்.
- ↑ இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து சீர்திருத்தத் திருச்சபயைச் சேர்ந்தவர்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1950களில் 350,000 பேர் நெதர்லாந்தில் இருந்து ஆத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா, அர்கெந்தீனா, தென்னாப்பிரிக்கா நோக்கி குடிபெயர்ந்தனர். இவர்களில் ந்தில் ஒரு பங்கினரே நாடு திரும்பினர். 1950களில் இடச்சு குடியேறிகள் 300,000 ஆக இருந்தனர். 1960 இற்குப் பின் 1.6 மில்லியன் ஆகும். Autochtone population at 1 January 2006, Central Statistics Bureau, Integratiekaart 2006', (external link) பரணிடப்பட்டது 2016-05-06 at the வந்தவழி இயந்திரம் (டச்சு)
- ↑ Official CBS website containing all Dutch demographic statistics. Cbs.nl. Retrieved on 3 September 2016.
- ↑ 3.0 3.1 Nicholaas, Han; Sprangers, Arno. "Dutch-born 2001, Figure 3 in DEMOS, 21, 4. Nederlanders over de grens" (PDF). Nidi.knaw.nl. Archived from the original (PDF) on June 11, 2007. பார்க்கப்பட்ட நாள் February 28, 2017.
- ↑ Data Access and Dissemination Systems (DADS). "American FactFinder – Results". census.gov. Archived from the original on 2017-05-25. பார்க்கப்பட்ட நாள் 2018-05-27.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 5.0 5.1 Nicholaas, Han; Sprangers, Arno. "210,000 emigrants since World War II, after return migration there were 120,000 Netherlands-born residents in Canada in 2001. DEMOS, 21, 4. Nederlanders over de grens". Nidi.knaw.nl. Archived from the original (PDF) on June 11, 2007.
- ↑ Federal Statistics Office – Foreign population பரணிடப்பட்டது பெப்பிரவரி 12, 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "ABS Ancestry". 2012.
- ↑ Number of people with the Dutch nationality in Belgium as reported by Statistic Netherlands பரணிடப்பட்டது 2017-07-06 at the வந்தவழி இயந்திரம் (டச்சு)
- ↑ "New Zealand government website on Dutch-Australians". Teara.govt.nz. 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-10.
- ↑ 10.0 10.1 10.2 Joshua Project. "Dutch Ethnic People in all Countries". Joshua Project. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-03-18.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "CBS – One in eleven old age pensioners live abroad – Web magazine". Cbs.nl. 2007-02-20. Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
- ↑ "Table 5 Persons with immigrant background by immigration category, country background and sex. 1 January 2009". Ssb.no. 2009-01-01. Archived from the original on 2011-11-15. பார்க்கப்பட்ட நாள் 2012-08-07.
- ↑ விரிவான தரவுகளுக்குப் பார்க்க: Statistics by the Dutch Centraal Bureau van de Statistiek (in Dutch).
- ↑ Cole, Jeffrey E. (25 May 2011). Ethnic Groups of Europe: An Encyclopedia: An Encyclopedia. ABC-CLIO. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1598843036. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ Glassman, Ronald M.; Swatos, William H.; Denison, Barbara J. (1 January 2004). Social Problems in Global Perspective. University Press of America. p. 348. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761829334. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
- ↑ Minahan, James (1 January 2000). One Europe, Many Nations: A Historical Dictionary of European National Groups. Greenwood Publishing Group. p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0313309841. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2015.
- ↑ Netherlanders in America, an example of usage of the term Netherlanders, in the title of a 20th-century book.
- ↑ Autochtone population at 1 January 2006, Central Statistics Bureau, Integratiekaart 2006, (external link) பரணிடப்பட்டது 2016-01-19 at the வந்தவழி இயந்திரம் This includes the Frisians as well.
- ↑ Based on Statistics Canada, Canada 2001 Census.Link to Canadian statistics. பரணிடப்பட்டது பெப்பிரவரி 25, 2005 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "2001CPAncestryDetailed (Final)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-08-27.
- ↑ According to Factfinder.census.gov பரணிடப்பட்டது 2020-02-11 at Archive.today
- ↑ Winkler Prins Geschiedenis der Nederlanden I (1977), p. 150; I.H. Gosses, Handboek tot de staatkundige geschiedenis der Nederlanden I (1974 [1959]), 84 ff.
- ↑ 16-ஆம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து இடச்சுக் குடியரசு சுதந்திர நாடாக இயங்கி வந்த போதிலும், அதன் உண்மையான விடுதலை 1648 மூன்ஸ்டர் உடன்பாட்டின் மூலமே வழங்கப்பட்டது.
- ↑ D.J. Noordam, "Demografische ontwikkelingen in West-Europa van de vijftiende tot het einde van de achttiende eeuw", in H.A. Diederiks e.a., Van agrarische samenleving naar verzorgingsstaat (Leiden 1993), 35–64, esp. 40
- ↑ "CBS statline Church membership". Statline.cbs.nl. 2009-12-15. பார்க்கப்பட்ட நாள் 2010-08-27.
- ↑ Religion in the Netherlands. (டச்சு)
- ↑ Britannica: "They were divided into three groups: the Salians, the Ripuarians, and the Chatti, or Hessians."(Link)
- ↑ Encyclopædia Britannica Online; entry 'History of the Low Countries'. 10 May. 2009;The Franks, who had settled in Toxandria, in Brabant, were given the job of defending the border areas, which they did until the mid-5th century