சமயச் சார்பின்மை

(சமய சார்பின்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமயசார்பற்ற அரசு (secularism) அல்லது சமய சார்பற்ற அரசு என்பது சமயம் அல்லது கடவுளை அரசையும் பிரித்து வைப்பது ஆகும். அரசின் நிர்வாக விடயங்களில் சமயத்துக்கு எவ்விதமான இடமும் இருப்பதில்லை. சமயமும் அரசும் தனித்தனியாக வைக்கபட்டிருப்பதாகும்.

சமய சார்பற்ற அரசில் சமயம் என்பதும், சமய நம்பிக்கை என்பதும் முற்றிலும் தனிப்பட்ட விடயமாகும். ஒரு சமயத்தின் மீது நம்பிக்கை வைப்பது அல்லது நம்பிக்கையற்று இருப்பது என்பது குடிமகனின் தனிப்பட்ட விடயமாக கருதுவது ஆகும்.

வரலாறு

தொகு

ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அரசுகள் அகற்றபட்டு, அந்த இடத்துக்கு முதலாலித்துவ அரசுகள் வந்தன. அப்போது ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அரசை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்தன. அப்போது , Secularism என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் .[1] இதன்பிறகு முதலாலித்துவ அரசுகளில் அரசனும் அரசும், சமயமும் தனித்தனியாக பிரிக்கபட்டன. சந்தை, அதன் வரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாக முதலாலித்துவ அரசுகள் இருந்தன. சமய சார்பற்ற தன்மை இதற்கு உதவிபுரிவதாக இருந்த இந்த நேரத்தில் சமயம் அத்தகைய உதவியை செய்வதாக அமையவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்தவ அரசுகள் தூக்கி எறியபட்டன.[2]

அரசியல் கொள்கையாக இருக்கிறது

தொகு

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்பு இந்தப் போக்கு வலுப்பெற்றிருக்கிறது. அனேக மேற்குநாடுகள், இந்தியா, சீனா, உருசியா உட்பட பல்வேறு நாடுகளில் இது ஒரு அரசியல் கொள்கையாகவும் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகள், இலங்கை ஆகியவை இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

கல்வியில் சமயம்

தொகு

சமயத்தை திணிப்பதை, அல்லது பொது செயற்பாடுகளில் புகுத்துவதை சமயசார்பின்மை எதிர்க்கிறது. எடுத்துக்காட்டாக கல்வியில் ஒரு சமயத்தை முதன்மைப்படுத்துவதை இது ஏற்றுக்கொள்ளவில்லை.

சமய சார்புள்ள அல்ல சமய கட்டுப்பாடுள்ள Shria Law போன்ற சட்டங்களையும் சமயசார்பின்மை எதிர்க்கிறது.

இந்திய நிலைமை

தொகு

1947 இல் இந்திய விடுதலையின்போது இந்தியா சமய அடிப்படையில் இந்தியா, பாக்கித்தான் என சமய அடிப்படையில் இரண்டாக பிரிக்கபட்டது. பிரிவினையின்போது இந்து முசுலீம் கலவரங்கள் ஏற்பட்டன. பாக்கித்தான் தன்னை இசுலாமிய குடியரசு என்று அறிவித்துக்கொண்டபோது. இந்தியா தன்னை சமய சார்பற்ற நாடு என்று அறிவித்துக்கொண்டது. இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பும், அதில் உள்ள பலவேறு விதிகளும் இந்தியா என்பது சமய சார்பற்றதொரு அரசு என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.[2]

அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் உள்ள 14ஆவது, 15ஆவது, 16ஆவது சரத்துகள் சமயத்தின்பேரல், நாட்டின் குடிமக்கள் எவருக்கு எதிராகவும் பாரபடசமான போக்கை கடைபிடிப்பதைத் தடை செய்வதோடு, பொது வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்புகள், சமமான சட்டப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன. மேலும் 15ஆவது சரத்து சமயத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ குடிமக்களில் எவர் மீதும் செயலற்றதன்மை, வெறுப்பு, கட்டுப்பாடு அல்லது நிபந்தனை ஆகியவற்றை கீழ்கண்ட விடயங்களில்ல் சுமத்தபடக்கூடாது என்றும் அறிவிக்கிறது;

  • அ) கடைகள், பொது உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பொது மக்களின் கேளிக்கைகளுக்கான இடங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது
  • ஆ) கிணறுகளை, குளங்களை, குளிப்பதற்காக ஆற்றங்கரைகளை, சாலைகளை, மக்கள் ஓவ்வெடுப்பதற்கான இடங்களைப் பயன்படுத்துவது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25ஆவது சரதது நாட்டில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு சமயத்தை பின்பற்றவும், அவற்றின்படி நடக்கவும், அதைப்பற்றி பரப்புரையில் ஈடுபடவுமான உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.[2]

இவ்வாறான நிலையில் இந்தியாவில் அண்மைக் காலங்களில் சமய சார்பினமை என்ற பதாகையை உயர்த்திப் பிரிடிப்பவர்களை தேசத் துதோகிகள் என்று முத்திரை குத்தபட்டுவருகின்றனர். பல அறிவுஜீவிகளுக்கு எதிராக மிரட்டங்கள் வெளியிடப்படுவதல்லாமல் கொலையும் செய்யபட்டுவருகின்றனர்.

தமிழர் சமய சார்பின்மை

தொகு

அனேக தமிழர் சமய நம்பிக்கைகள் உடையவர்களே. பல்வேறு காலகட்டங்களில் தமிழர் அரசியல் அமைப்புகள் சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

இறைமறுப்பை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் அடிப்படையில் உருவான திராவிட கட்சிகளின் தொண்டர்களும் தலைவர்களும் குடும்பத்தினரும் கூட பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் பல்வேறு மத திருத்தலங்களை தரிசிப்பது என்பதும் வழிபாடு செய்வது என்பதும் தமிழகத்தில் முரண்பாடான குழப்பமான நடைமுறைக் கொள்கையாக உள்ளது.[3][4][5][5][6][7]

சமயம் சாரா இலக்கியங்கள்

தொகு
  1. திருக்குறள்- உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சமயம் சாரா புனித நூல் ஆகும்.[சான்று தேவை]இந்த நூலினை உலகப்பொதுமறை என்றும், தமிழர்மறை என்றும் கூறுவர்.

சமய சார்பின்மை போக்கு

தொகு

தற்காலத்தில் பொது வாழ்விலும் அரசியலிலும் சமய சார்பின்மை போக்கினையே தமிழர் பெரிதும் பின்பற்றி வருகிறார்கள்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. தே. இலட்சுமணன் (6 செப்டம்பர் 2014). "நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே!". தீக்கதிர் தமிழ் நாளிதழ். p. 3. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 6 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. 2.0 2.1 2.2 து. அரிபரந்தாமன், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (2019). பொங்கல் மலர் 2019. சென்னை: சிந்தனையாளன் இதழ். pp. 65–70.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. http://tamil.oneindia.in/news/2004/03/24/jaya.html
  4. http://tamil.oneindia.in/news/tamilnadu/durga-satlin-prays-ramar-temple-viruthunagar-208670.html
  5. 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-10-04.
  6. http://tamil.oneindia.in/news/tamilnadu/special-prayers-jaya-s-release-212233.html
  7. http://tamil.oneindia.in/news/tamilnadu/hindus-dmk-should-abandon-their-party-asks-h-raja-210028.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமயச்_சார்பின்மை&oldid=3929588" இலிருந்து மீள்விக்கப்பட்டது