எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்

எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது. இது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அலுவலகமாக இருந்த இடமாகும். அவருடைய இறப்பிற்குப் பிறகு நினைவிடமாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்
எம்.ஜி.ஆரின் அம்பாசடர் கார்

நினைவிடத்தின் அமைப்பு மற்றும் உள்ளவை தொகு

இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் எம்.ஜி.ஆர் ரசிகர்களும், அரசியல்வாதிகளும், கட்சி தலைவர்களும் மாலை அணிவிக்கின்றனர். [1]

இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.[2]

எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள் தொகு

  • எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.
  • எம்.ஜி.ஆர் படித்த நூல்கள்
  • எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள்
  • அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள்.
  • எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார்
  • எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள்.
  • துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • இந்தியா, இலங்கை, ரஷ்யா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், நார்வே, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நாணயங்கள்

நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில் தொகு

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.[3]

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.koodal.com/news/tamilnadu.asp?id=35843&title=hundreds-of-fans-celebrate-mgrs-birthday-with-fervour-tamilnadu-news-headlines-in-tamil[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம் வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து
  3. "எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்". Archived from the original on 2011-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.ஜி.ஆர்_நினைவு_இல்லம்&oldid=3935379" இலிருந்து மீள்விக்கப்பட்டது