எம்.டி.வி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
எம் டிவி ( MTV) இலங்கையில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். [1] டிசம்பர் 14 1992ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி , சக்தி டிவி என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
எம் டிவி | |
---|---|
தொடக்கம் | 14 திசம்பர் 1992 |
உரிமையாளர் | எம்டிவி சேனல்(MTV Channel) |
நாடு | இலங்கை |
ஒலிபரப்பப்படும் பகுதி | இலங்கை உலகம் |
தலைமையகம் | கொழும்பு |
சகோதர ஊடகங்கள் | சக்தி டிவி சிரச டிவி நியூஸ் பெஸ்ட் |
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் Fox News ஒளிபரப்புகின்றது.