எம்.வி. சிட்னி 2000
எம்.வி. சிட்னி 2000 (MV Sydney 2000) என்பது சிட்னி துறைமுகத்தில் இயங்குகின்ற ஒரு கப்பல் ஆகும். சிட்னி துறைமுகத்தில் இயங்கும் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமை எம்.வி. சிட்னி 2000 என்ற இக்கப்பலுக்கு உண்டு. மேற்கு ஆத்திரேலியாவின் துணை நகரமான எண்டர்சனில் உள்ள ஆசுடால் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 1998 ஆம் ஆண்டில் இக்கப்பலைக் கட்டியது. மூன்று தளங்களும், ஐந்து தனியார் சாப்பாட்டு அறைகளும் கொண்ட மிதக்கும் உணவகமாக இக்கப்பல் செயல்படத் தொடங்கியது.[1][2]
எம்.வி. சிட்னி 2000 கப்பல் கேப்டன் குக் பயணிகள் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். 2008 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் தேதி சிட்னி 2000 கப்பலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அதிகாரப்பூர்வமான 2008 ஆம் ஆண்டு உலக இளைஞர் தினத்திற்கு பரங்காருவை வரவேற்பதற்காக ரோசு துறைமுகத்திலிருந்து இக்கப்பலில் பயணம் செய்தார்.[3][4].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sydney 2000 - 9170690 - Inland Passenger Ship". Maritime Connector website. Maritime Connector. Archived from the original on 19 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Captain Cook Cruises | Company History". Tourism Industry Council NSW website. Tourism Industry Council NSW. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
- ↑ "Comfort amid tight security on harbour cruise". Sydney Morning Herald website. Sydney Morning Herald. 17 July 2008. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
- ↑ "MV Sydney 2000 hosts Pope Benedict XVI". e Travel Blackboard website. e Travel Blackboard. 18 July 2008. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் MV Sydney 2000 தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Sydney 2000 பரணிடப்பட்டது 2020-03-19 at the வந்தவழி இயந்திரம்