எம். அப்துல் காதர்
எம். எஸ். அப்துல் காதர் (M. Abdul Kader) (1932 - 2009) முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் சென்னை மேயராகவும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
தொகுதிசம்பர் 1959 இல் சென்னை மாநகராட்சியில் பெரும்பான்மை இடங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வென்றபோது, காதர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 ஆம் ஆண்டில், மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார்.
இறப்பு
தொகுஅக்டோபர் 3, 2009 அன்று, எம். எஸ். அப்துல் காதர் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- "Former mayor Khader dead". The Hindu. 4 October 2009 இம் மூலத்தில் இருந்து 25 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130125054858/http://www.hindu.com/2009/10/04/stories/2009100460600600.htm.