எம். ஆர். எஸ். மணி

தமிழ்த் திரைப்பட நடிகர்

எம். ஆர். எஸ். மணி (பிறப்பு: அண். 1912 - ) தமிழகத் திரைப்பட, நாடக நடிகரும், இயக்குநரும் ஆவார்.

எம். ஆர். எஸ். மணி
பிறப்புஅண். 1912[1]
மாளாபுரம், தஞ்சாவூர்
கல்விபாபனாசம் விக்டோரியா உயர்நிலைப் பள்ளி
அறியப்படுவதுநாடக, திரைப்பட நடிகர், இயக்குநர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எம். ஆர். எஸ். மணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள மாளாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் தந்தை ஆரம்பித்த பாபனாசம் விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இசைத்துறையில் நாட்டம் இருந்ததால் ஐந்தாம் பாரத்தில் இருந்து படிப்பை நிறுத்திக் கொண்டார். சிறு வயதில் இருந்தே தனது சிற்றப்பாவின் வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், ஒரு சகோதரருமாவர்.[1]

மணி ஆரம்பத்தில் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபாவில் தனது 16வது வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த முதலாவது நாடகத்தில் காவல்துறை அதிகாரியாக வேடமேற்றார். அன்றில் இருந்து 1930 வரை பல நாடகங்கலில் காவல்துறை வேடமேற்று நடித்தார். இதனால் இவரை "இன்ஸ்பெக்டர் மணி" என்றே அனைவரும் அழைத்தனர். இலங்கைக்கும் சென்று நாடகங்களில் நடித்துள்ளார்.[1]

மணி நடித்த முதல் திரைப்படம் நளதமயந்தி ஆகும். இது 1935 இல் வெளிவந்தது. இதில் பீமனாகவும், கார்க்கோடனாகவும் இவர் நடித்தார். கல்கத்தா பயனீர் ஸ்டூடியோவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.[1] இதற்குப் பின்னர் மணி மீண்டும் நாடகங்களில் நடித்தார். இவரை நாடக மேடையில் இருந்து மீண்டும் திரைக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம். தனது பாலயோகினி (1937) படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க வைத்தார்.[1] தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் வெளியான விகடயோகி (1946), கீத காந்தி (1949) ஆகியவற்றுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[1]

நடித்துள்ள திரைப்படங்கள்

தொகு

இயக்கிய திரைப்படங்கள்

தொகு
  • அச்சான் (1952, மலையாளம்)
  • தந்தை (1953)
  • அவன் வருன்னு (1954, மலையாளம்)
  • கிடப்பாடம் (1955, மலையாளம்)
  • சல்லி மல்லி சல்லி (1958, சிங்களம்)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ராஜாராம் (நவம்பர் 1948). "இன்ஸ்பெக்டர் மணி". பேசும் படம்: பக். 30-35. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஆர்._எஸ்._மணி&oldid=2262877" இலிருந்து மீள்விக்கப்பட்டது