மா. இராமச்சந்திரன்
மா. இராமச்சந்திரன் (M. Ramachandran) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார்.[1] தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினா், வீட்டுவசதி துறை மற்றும் விவசாய துறை அமைச்சா் ஆா். வைத்திலிங்கத்தை தோற்கடித்தாா்.[2][3] இந்தத் தேர்தலின்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாா்பாக எஸ். எஸ். ராஜ்குமாா் என்பவர் முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் மா. இராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டாா்.[4]
இவர் 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், திருவோணம் தொகுதியில் வெற்றிபெற்றார். மற்றும் 1991 மற்றும் 2001 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தோல்வியடைந்தாா்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Orathanadu (Tamil Nadu) Election Results 2016". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2017-05-14.
- ↑ "DMK and AIADMK edge out others in Thanjavur district". The Hindu. 20 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/dmk-and-aiadmk-edge-out-others-in-thanjavur-district/article8623133.ece. பார்த்த நாள்: 2017-05-15.
- ↑ Ravikumar, N. (7 May 2016). "R Vaithilingam banks on development schemes, easy access to people". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/nation/politics/070516/r-vaithilingam-banks-on-development-schemes-easy-access-to-people.html. பார்த்த நாள்: 2017-05-15.
- ↑ "DMK changes Orathanad candidate". The Hindu. 17 April 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dmk-changes-orathanad-candidate/article8484767.ece. பார்த்த நாள்: 2017-05-15.