எம். எம். ஏ. ரசாக்
இந்திய அரசியல்வாதி
எம். எம். ஏ. ரசாக் (இறப்பு சனவரி 22, 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ளார். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் திடீர் உடல்நலக் குறைவினால் தமது 76ஆம் அகவையில் சனவரி 22, 2022 அன்று தென்காசி மாவட்டம் வடகரையில் காலமானார்.[2]
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1977 | கடையநல்லூர் | அ.தி.மு.க | 38.78 | 29347 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
- ↑ "காலமானார் முன்னாள் எம். எல். ஏ. ரசாக் [Former MLA MM Razak passed away]" (in Tamil). தினமணி (Chennai): p. 5. 23.01.2022.