எம். கமலம்
எம்.கமலம்(M. Kamalam)(14 ஆகஸ்ட் 1926 - 30 ஜனவரி 2020) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கேரள அரசியல்வாதியாவார். இவர் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராகவும், கேரள அரசின் அமைச்சராகவும் இருந்தார்.
எம்.கமலம் | |
---|---|
கேரளாவின் கூட்டுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 1982–1987 | |
கேரள சட்டமன்றம் | |
பதவியில் 1980–1987 | |
முன்னையவர் | கே. ஜி. ஆதியோதி |
பின்னவர் | எம். பி. வீரேந்திர குமார் |
தொகுதி | கல்பற்றா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 ஆகத்து 1926 |
இறப்பு | 30 சனவரி 2020 | (அகவை 93)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகமலம், 1926 ஆகஸ்ட் 14 ஆம் தேதி கெலோத் கிருஷ்ணன்- கெலோத் ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார்.[1][2] இவர் அகில இந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார்.
எம். கமலம் 30 ஜனவரி 2020 ல் கேரள சட்டமன்றத்தில் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருந்தார்.[3] இவர் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். [4] கேரள மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[5] கமலம் கோழிக்கோடு மாநகராட்சியில் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.[6] 1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரசிலிருந்து விலகிய இவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1977ஆம் ஆண்டில் ஆறாவது மக்களவைத் தேர்தலில் கோழிகோட்டிலிருந்து போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. 1980ல் கல்பற்றா சட்டமனறத் தொகுதியிலிருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] பின்னர், மீண்டும் இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[6] 1982 ஆம் ஆண்டில் அவர் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 1982 முதல் 1987 வரை கேரள அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[9]
குடும்பம்
தொகுகமலம், எம். சாமிகுட்டி என்பவரை மணந்தார்.[1] இவர்களுக்கு எம். யதீந்திரதாஸ், எம். முரளி, எம். ராஜகோபால் என்ற நான்கு மகன்களும் பத்மஜா சாருதத்தன் என்ற ஒரு மகளும் இருந்தனர்.[4]
இறப்பு
தொகுகமலம், 30 ஜனவரி 2020 அன்று தனது 93 வயதில் கோழிக்கோட்டின் நாடக்காவு அருகே உள்ள தனது வீட்டில் காலமானார்.[2][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "M . KAMALAM". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
- ↑ 2.0 2.1 "Former Kerala Minister M. Kamalam passes away at 93". 30 January 2020. https://www.thehindu.com/news/national/kerala/former-kerala-minister-m-kamalam-passes-away-at-93/article30690272.ece. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ "Veteran Congress leader Kamalam dead". 30 January 2020. https://wap.business-standard.com/article/pti-stories/veteran-congress-leader-kamalam-dead-120013000367_1.html. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ 4.0 4.1 "Former minister M Kamalam passes away". 30 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130033710/https://english.mathrubhumi.com/news/kerala/former-minister-m-kamalam-passes-away-1.4486455. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ "Veteran Congress leader Kamalam passes away". 30 January 2020. https://m.telegraphindia.com/india/veteran-congress-leader-kamalam-dead/cid/1740804. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ 6.0 6.1 "Former Kerala minister M Kamalam dies at 94". 30 January 2020. https://m.timesofindia.com/city/kozhikode/congress-leader-m-kamalam-passes-away-in-kozhikode/articleshow/73757128.cms. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ "Kerala Assembly Election Results in 1980". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
- ↑ "Winners of Kerala Assembly elections 1982 with victory margins". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 19 January 2020.
- ↑ "M Kamalam, veteran Congress leader and former Kerala minister passes away". 30 January 2020. https://indianexpress.com/article/india/kerala/m-kamalam-veteran-congress-leader-and-former-kerala-minister-passes-away-6242395/. பார்த்த நாள்: 30 January 2020.
- ↑ "Veteran Congress leader Kamalam dead". 30 January 2020. https://www.thehansindia.com/news/national/veteran-congress-leader-kamalam-dead-601153. பார்த்த நாள்: 30 January 2020.