எம். கமலாத்தாள்
எம். கமலாத்தாள் (M Kamalathal) என்பவர் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர். இவரைப் பாசமாக இட்லி அம்மா (அம்மா மற்றும் பாட்டிமா) என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு இட்லி தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் இவர் செய்த பணிக்காக அறியப்பட்ட ஓர் இந்தியச் சமூக சேவகர் ஆவார்.[1]
எம். கமலாத்தாள் | |
---|---|
பிறப்பு | 1934/1935 (அகவை 89–90) வடிவேலம்பாளையம், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | இட்லி அம்மா பாட்டிமா (பாட்டி) |
அறியப்படுவது | தேவையானவர்களுக்கு ஒரு இட்லி 1 ரூபாய்க்கு |
சமூகப் பணிகள்
தொகுகோயம்புத்தூர் நகரின் புறநகரில் உள்ள வடிவேலம்பாளையத்தில் வசிக்கும் கமலாத்தாள், தனது தன்னலமற்ற சேவை மற்றும் குறைந்த இலாபத்தில் வணிகம் செய்வதால் பெயர் பெற்றவர்.[2] இவர் ஒவ்வொரு நாளும் சுமார் 600 இட்லி சாம்பார் மற்றும் சட்னி பக்க உணவுகளுடன் ஒரு இட்லி 1 ரூபாய் என விற்கிறார். இவை அனைத்தினையும் இவர் தனியாகவே தயாரிக்கிறார்.[3][4] இவரின் சேவையினை அறிந்த மகேந்திரா நிறுவனம் இவருக்கு வீட்டினையும் நவீன சமையலறையினையும் கட்டிக்கொடுத்தனர்.[5] இவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனது மனதின் குரல் நிகழ்ச்சியிலும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும்போது சிறப்பித்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paatima's ₹1 idlis a crowd-puller in Coimbatore". தி இந்து (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
- ↑ "The Wonder Woman Behind Coimbatore's '1 Rupee Idli'". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
- ↑ "The 1 ₹ Idli along with Care - Meet K Kamalathal, The 80-Year-Old Woman". My Adventures by Praveen Kumar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ "Meet 85-year old Kamalathal, who sells idlis for Rs 1". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 September 2019.
- ↑ https://timesofindia.indiatimes.com/life-style/food-news/watch-anand-mahindra-shares-his-idli-love-in-the-most-unique-way/articleshow/99189160.cms
- ↑ https://minnambalam.com/tamil-nadu/chief-minister-honored-grandmother-who-sells-idly-for-one-rupee/