எம். கே. அர்ஜுனன்

இந்திய இசையமைப்பாளர்

எம். கே. அர்ஜுனன் (பிறப்பு: ஆகத்து 25, 1931) மலையாளத் திரைப்படத்துறையின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர். மெல்லிசை மெட்டுக்களுக்காக பெரும்புகழ் பெற்றவர்.

வரலாறு

தொகு

கொச்சி துறைமுகம் அருகே சிரட்டப்பாலம் என்ற ஊரில் 1931ல் பிறந்தார். தந்தை கொச்சுகுஞ்சு. தாய் பார்வதி. இளமையிலேயே அர்ஜுனன் தந்தையை இழந்தார். பார்வதிக்கு 14 குழந்தைகள். மூத்தவராகிய அர்ஜுனன் பலகாரங்களை சுமந்து விற்று தம்பிகளை பார்த்துக்கொள்ள நேர்ந்தது. அவரது கடும் வறுமையைக் கண்ட ராமசாமி என்ற காங்கிரஸ்காரர் பழனியில் உள்ள ஜீவகாருண்யானந்தா என்ற அனாதைவிடுதிக்கு அவரையும் இரு தம்பிகளையும் அனுப்பிவைத்தார்

நாராயணசாமி என்ற துறவி அந்த அனாதை விடுதியை நடத்திவந்தார். அங்கே ஆர்மோனியம் வாசிக்கவும் இசையின் ஆரம்பப் பாடங்களையும் கற்றார். தினமும் பஜனைகளில் ஈடுபடும் வழக்கம் இருந்தது. அவரது திறனை கண்ட ஆசிரம தலைவர் அவருக்கு சிறப்பு இசைக்கல்வி அளிக்க ஏற்பாடு செய்தார். குமாரையாபிள்ளை என்ற இசைக்கலைஞரை அதற்கு நியமித்தார்.

இளம் வயதிலேயே இசையைக்க ஆரம்பித்த அர்ஜுனன் விரைவில் அதையே தொழிலாகக் கொண்டா. கீதா பீப்பிள்ஸ் தியேட்டர், கொல்லம் காளிதாச கலாகேந்திரம், தேசாபிமானி தியேட்டர்ஸ், ஆலப்பி தியேட்டர்ஸ், கெ.பி.எ.சி போன்ற நாடக குழுக்களுக்கு பாடல்களை அமைத்தார். கிட்டத்தட்ட 300 நாடகங்களுக்கு 800 பாடல்களை அவர் அமைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இசையமைப்பு வருமானம் அளிக்காததனால் ஒரு வீட்டில் காவல்காரராக பணியாற்றினார்.

1961ல் அர்ஜுனன் பாரதியை மணந்தார். திரையில் தேவராஜன் இசையமைத்த பல படங்களுக்கு அர்ஜுனன் ஆர்மோனியம் வாசித்தார். பல மெட்டுகள் அவருடையவை எனப்படுகின்றன. 1968ல் வெளிவந்த கறுத்த பௌர்ணமி அவரது முதல் படம். அதுமுதல் தொடர்ச்சியாக இசையமைத்து வருகிறார். 218 படங்களில் 500 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்

சிறப்பு

தொகு

அர்ஜுனன் மலையாள மண்ணுக்குரிய சிறப்பான மெல்லிசையை உருவாக்கியவர் என்று புகழப்படுகிறார். இன்றும் மலையாளத்தில் பெரிதும் விரும்பப்படும் பல பாடல்கள் அவரால் அமைக்கப்பட்டவை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._அர்ஜுனன்&oldid=3262854" இலிருந்து மீள்விக்கப்பட்டது