எம். சி. புர்கித்

பிரிட்டிசு தொல்பொருள் ஆய்வாளர் (1890-1971)

மைல்சு கிராபோர்டு புர்கிட் (Miles Crawford Burkitt) (27 டிசம்பர் 1890 - 22 ஆகத்து 1971) பிரிட்டிசு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பழங்கால வரலாற்றாய்வாளராவார். ஐரோப்பா, ஆசியா, மற்றும் குறிப்பாக ஆப்பிரிக்காவின் கற்கால ஆய்வுகளுக்காக நன்கறியப்பட்டவர். ஆப்பிரிக்கத் தொல்லியியல் ஆய்வுகளின் முதல் முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். தொல்லியல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் விரிவுரையாளர் ஆவார்.

அவர் ஏடன் கல்லூரி மற்றும் கேம்பிறிசு திரித்துவக் கல்லூரியில் இயற்கை அறிவியல்களில் கல்வி பயின்றார். மேலும் இவருக்குத் தாமசு மெக்கென்னி கியூசு பேராசிரியராக இருந்தார். இவர் பிரான்சு மற்றும் எசுப்பானியாவில் அபே ப்ரூயில் மற்றும் கியூகோ ஓபர்மேயர் ஆகியோருடன் இணைந்து அகழ்வாராய்ச்சி செய்தார். மேலும் முதலாம் உலகப் போரின் போது பிரான்சில் இளைஞர்கள் கிறித்துவ சங்கத்துடன் பணியாற்றினார். இவர் கேம்பிரிட்சில் வரலாற்றுக்கு முந்தைய தொல்பொருளியல் பற்றி விரிவுரை செய்தார். முதலில் தன்னார்வ அடிப்படையில் சேர்ந்து இறுதியில் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் மானுடவியல் விரிவுரையாளர் ஆனார். இரண்டாம் உலகப் போரின் போது 4 வது கேம்பிரிட்சுசயர் ஊர்க்காவலர் படையின் (1941-1945) இளையரையராக இருந்தார். இவர் 1942 ஆம் ஆண்டு அமைதியின் நீதியரசரானார். மேலும் 1939 ஆம் ஆண்டு மற்றும் 1964 ஆம் ஆண்டுக்கு இடையில் கேம்பிரிட்சுசையரின் மாவட்ட உறுப்பினராகவும், அதைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராகவும், பின்னர் 1961 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை தலைவர் ஆகவும் பணியாற்றினார். இவர் 1960 ஆம் ஆண்டு கேம்பிரிட்சுசையர் மற்றும் கண்டிங்டன்சையரின் மாநகர அண்ணல் (செரிப்) ஆக ஆனார். 1964 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை துணை நகரத்தந்தை (ஆல்டர்மேன்) ஆக இருந்தார். இவரது மனைவி மார்கரெட் இசோபெல் புர்கிட் என்று அழைக்கப்பட்டார்.

நூல்கள்

தொகு

அவரது வரலாற்றுக்கு முந்தையவை:

  • "ஐரோப்பா மற்றும் நிலநடுக்கடல் பகுதியின் ஆரம்பகால கலாச்சாரங்களின் ஆய்வு"

இந்நூல் முதலில் 1921 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுப் பின்னர், 2012 ஆம் ஆண்டு கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சகத்தால் மீண்டும் வெளியிடப்பட்டது. [1]

மற்ற நூல்கள் பின்வருமாறு:

  • எங்கள் முன்னோடிகள் (1923), முகப்பு பல்கலைக்கழக நவீன அறிவு நூலகம் தொடருக்கான பிரபல்யப்படுத்தும் படைப்பு.
  • நமது முற்கால மூதாதையர்கள்: ஐரோப்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள இடைக்காலம், புதிய கற்காலம் மற்றும் செப்புக் காலக் கலாச்சாரங்களின் அறிமுக ஆய்வு (1926 ஆம் ஆண்டு)
  • கல் மற்றும் வண்ணப்பூச்சில் தென்னாப்பிரிக்காவின் முற்காலம்' (1928)
  • பழைய கற்காலம் - பழங்கற்காலக் காலங்கள் பற்றிய ஆய்வு (1933)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._புர்கித்&oldid=3809514" இலிருந்து மீள்விக்கப்பட்டது