எம். டி. ஆர். இராமச்சந்திரன்
இந்திய அரசியல்வாதி
எம். டி. ஆர். ராமச்சந்திரன் (M. D. R. Ramachandran) (மறைவு: 8 திசம்பர் 2024) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 முதல் 1983 வரை, மற்றும் 1990 முதல் 1991 வரை புதுச்சேரி முதலமைச்சராக இரண்டு முறை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பணியாற்றினார்.[1] 2001 முதல் 2006 வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் பணியாற்றினார்.
எம். டி. ஆர். இராமச்சந்திரன் | |
---|---|
16 ஆவது புதுச்சேரி சபாநாயகர் | |
பதவியில் 11 சூன், 2001 – 26 மே 2006 | |
முன்னையவர் | ஏ. வி. சுப்ரமணியன் |
பின்னவர் | ஆர். இராதாகிருஷ்ணன் |
10 ஆவது புதுச்சேரி முதலமைச்சர் | |
பதவியில் 8 மார்ச், 1990 – 3 மார்ச், 1991 | |
முன்னையவர் | பாரூக் மரைக்காயர் |
பின்னவர் | வி. வைத்தியலிங்கம் |
பதவியில் 16 சனவரி, 1980 – 23 சூன், 1983 | |
முன்னையவர் | எஸ். ராமசாமி |
பின்னவர் | பாரூக் மரைக்காயர் |
இவர் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று, புதுச்சேரி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு
தொகுஇராமச்சந்திரன் தனது 94ஆவது அகவையில் முதுமை காரணமாக திசம்பர் 8 2024 அன்று புதுச்சேரியில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Chief Ministers (CM) of Pondicherry". mapsofindia. பார்க்கப்பட்ட நாள் சனவரி 10, 2019.
- ↑ R, Nantha Kumar (2024-12-08). "புதுச்சேரி மாஜி முதலமைச்சர் எம்டிஆர் ராமச்சந்திரன் காலமானார்.. என்ன பிரச்சனை?". பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.