எம். துரைசாமி

எம். துரைசாமி (M. Duraiswamy)(பிறப்பு 22 செப்டம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாற்றத்தினைத் தொடர்ந்து சிலநாட்கள் பணியாற்றினார்.[1]

மாண்புமிகு நீதியரசர்
எம். துரைசாமி
நீதிபதி மதராசு உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மார்ச் 2009
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
பொறுப்பு தலைமை நீதிபதி மதராசு உயர் நீதிமன்றம்
பதவியில்
17 நவம்பர் 2021 – 22 நவம்பர் 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 செப்டம்பர் 1960 (1960-09-22) (அகவை 63)

வாழ்க்கை தொகு

துரைசாமி 1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் நாளன்று பிறந்தார். இவர் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்து, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்று 1987ஆம் அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் குழுமத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். சத்தீசுகர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எசு. வெங்கடாசலமூர்த்தியின் கீழ் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1997 முதல் 2000 வரை மத்திய அரசின் நிலை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011 ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. Upadhyay, Sparsh (2021-11-17). "Centre Notifies Justice M. Duraiswamy's Appointment As Acting Chief Justice Of Madras HC Until Justice MN Bhandari Joins HC". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._துரைசாமி&oldid=3322527" இலிருந்து மீள்விக்கப்பட்டது