எம். நர்மதா

இந்திய வயலின் இசைக் கலைஞர்

முனைவர் எம். நர்மதா (Dr. M. Narmadha) கருநாடக மற்றும் இந்துசுதானிய இசை மரபுகளில் வந்த இந்திய வயலின் கலைஞர் ஆவார் .

எம். நர்மதா

ஆரம்ப வாழ்க்கை

தொகு

நர்மதா வயலின் கலைஞர் எம். எஸ். கோபாலகிருட்டிணனின் மகளாவார். [1] இவர் தனது தாத்தா பாரூர் ஏ. சுந்தரம் ஐயரிடமும் பின்னர் தனது தந்தையிடமும் பயிற்சி பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் சித்தார் இசைக் கலைஞரும், பேராசிரியருமான தேபு சவுத்ரி மற்றும் இசைக்கலைஞர் முனைவர் கே. ஜி. கிண்டே ஆகியோரின் கீழ் பல்கலைக்கழக மானியக் குழுவின் சக ஊழியராக முனைவர் பட்டம் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு வட மற்றும் தென்னிந்திய இசை பாணிகளை ஒப்பிடுகிறது.

பயிற்சி

தொகு

புகழ்பெற்ற, திறமையான இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த எம். நர்மதா, பாரூர் எம்.எஸ்.ஜி பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையாவார். இவரது தாத்தா பாரூர் சுந்தரம் ஐயர் என்பவரிடம், நான்கு வயதிலிருந்து முறையான பயிற்சியுடன் தொடங்கினார். பத்மசிறீ மற்றும் பத்ம விபூசண் விருது பெற்ற இவரது தந்தை எம்.எஸ். கோபாலகிருட்டிணன் (வயலின்) மற்றும் தாய் மீனாட்சி ஆகிய இருவரிடமிருந்தும், சங்கீத கலாநிதி டி. எம். தியாகராஜனிடமிருந்தும் கருநாடக மற்றும் இந்துஸ்தானி முறைகளை ஒரே நேரத்தில் கற்றார். பின்னர் இரு பாணிகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.[2]

ஆய்வு

தொகு

தனது தொழிலில் தங்கப் பதக்கம் வென்ற இவர், அனைத்திந்திய வானொலியின் தர கலைஞர் ஆவார். நர்மதா, தில்லி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல்கலைக் கழக மான்ய குழுவின் சிதார் ஆசிரியர் பேராசிரியர் தெபு சௌத்ரி மற்றும் பாடகர் முனைவர் கே. ஜி. ஜிண்டே ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்திய இசையில் ராகத்தைப் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு குறித்த தனித்துவமான ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். பின்னர் இது "இந்திய இசை" என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிகள்

தொகு

நர்மதா தனது தந்தை எம். எஸ். கோபாலகிருட்டிணனுடன் இணைந்து பல ஆண்டுகளாக வயலினில் இசையமைத்துள்ளார். இவர் மிகவும் விரும்பப்படும் தனி வயலின் இசைக் கலைஞர் மட்டுமல்லாமல், முன்னணி கர்நாடக பாடகர்களுடனும் இசையமைத்து வருகிறார். மேலும் 7,000 இசை நிகழ்ச்சிகளுடன் இந்திய இசையில் 45 ஆண்டுகால சேவையைப் பெற்றுள்ளார். இவர் தனது தாயார், டி. எம். தியாகராஜன் ஆகியோரால் குரல் பயிற்சியளிக்கப்பட்டு, வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஸ்பெயின், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். சென்னை மியூசிக் அகாதமியால் தொடர்ச்சியாக எட்டு முறை சிறந்த வயலின் கலைஞருக்கான விருதைப் பெற்றுள்ளார்.[3] இந்துஸ்தானி, கருநாடக இசையில் ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். இவரது நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவலாக நிகழ்த்தப்பட்டுள்ளன. மேலும் இந்திய இசையின் இரு பாணிகளிலும் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

தொகு

இந்திய பாரம்பரிய வயலின் இசைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மும்பை சண்முகானந்தா சங்கீதா சபாவின் சண்முகானந்தா சங்கீதா சிரோமணி விருது, மியூசிக் டுடே குழுமத்தின் சிறந்த வயலின் கலைஞருக்கான யாமி விருது, மும்பை மற்றும் சாந்திடூட் விருது, மற்றும் உஜ்ஜைன், மகாமவுண்டிர்த் ஆசிரம விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._நர்மதா&oldid=3775844" இலிருந்து மீள்விக்கப்பட்டது