எம். யோகநாதன்

மாரிமுத்து யோகநாதன் (M. Yoganathan) (1969 ஆம் ஆண்டு பிறந்தவர்) இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் பிரபலமாக உள்ள மரம் நடும் மனிதர் ஆவார். அவர் கடந்த 25 ஆண்டுகளில் 1 லட்சம் மரங்களை நட்டுள்ளார். அவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.

மாரிமுத்து யோகநாதன்
பிறப்பு1969 (அகவை 54–55)
இருப்பிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணியகம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் பேருந்து நடத்துனர்
அரசியல் இயக்கம்மரம் நடுதல்
வலைத்தளம்
http://www.yogutrees.com

வாழ்க்கை

தொகு

அவர் இளம் வயதிலேயே கோத்தகிரி வனப்பகுதிகளில் உள்ள மரங்களின் கீழ் அமர்ந்து கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்டவர். மரங்களை வெட்டுவதற்கு எதிராக, சட்ட விரோதமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த கும்பலுடன் அவர் சண்டையிட்டார். கோயம்புத்தூரில் உள்ள மருதமலை-காந்திபுரம் சாலையில் இயங்கும் எஸ் -26 பேருந்தில் தமிழக அரசின் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மரங்களை வெட்டுவதனால் வரும் ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் [1]. அவர் மரங்கள் அறக்கட்டளையில் (Tree Trust) உறுப்பினராக உள்ளார்[2]. அவர் மரக்கன்றுகளை வாங்குவதற்கும் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதற்கும் தனது மாத சம்பளத்தில் 40% பயன்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மலையேற்றம் மூலமாக மட்டும் அவர் 1,20,000 மரங்களை நட்டுள்ளார்.

விருதுகள்

தொகு
  • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் சேவை வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது [3].
  • CNN-IBN இன் உண்மையான கதாநாயகன் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._யோகநாதன்&oldid=2693480" இலிருந்து மீள்விக்கப்பட்டது