எம். ரெங்கசாமி
எம். ரெங்கசாமி (M. Rengasamy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியினைச் சார்ந்த இவர் 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[1][2] 2017 ஆம் ஆண்டு அமமுக கட்சியில் சேர்ந்த இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இவர் தோல்வியடைந்தார்.[3]
எம். ரெங்கசாமி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் தொகுதி | |
பதவியில் 2011–2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாபநாசம், திருவெறும்பூர், தமிழ்நாடு , இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழிடம் | தமிழ்நாடு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஎம். ரெங்கசாமி 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று பிறந்தார். இவரது பெற்றோர் கோ. மருதய்யா, ஜெயலெட்சுமி ஆகியோராவர். சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள நல்லவன்னியன் குடிக்காடு, மலையர்நத்தம் என்பதாகும். மனைவி ரெ. இந்திரா, மகன்கள் ரெ. மனோ பாரத், ரெ. வினோ பாரத் என்பவர்களாவர்.[4] 1972 ஆம் ஆண்டிலிருந்து அதிமுக கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
- ↑ Echo of poll debacle: AMMK sees many jumping ship
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
- ↑ "அமமுக வேட்பாளர் எம். ரெங்கசாமி". தினமணி.
- ↑ "தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் எம். ரெங்கசாமி". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/mar/23/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3119252.html. பார்த்த நாள்: 21 May 2023.