எம். லீலாவதி

சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

எம். லீலாவதி (M. Leelavathy, பிறப்பு: 16 செப்டம்பர் 1927) ஒரு மலையாள எழுத்தாளர் மற்றும் கல்வியாளர்.[1] இவர் முதல்வராக அரசு பேரினன் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதற்கு முன்பாக பல கல்லூரிகளில் பொது ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவருடைய நீண்ட கல்விப்பணியில், பல விருதுகளைப் பெற்றுள்ளர். அவற்றில் கேரள சாகித்ய அகாடமி விருது, கேந்திர சாகித்ய அகாடமி விருது உள்ளடங்கியதாகும்.[2] லீலாவதி பத்மசிறீ விருது பெற்றவர்.[3] .

எம். லீலாவதி
பிறப்பு16 செப்டம்பர் 1927 (1927-09-16) (அகவை 96)
கோட்டபாடி, திருச்சூர்
கல்விமுனைவர்
பணிதிறனாய்வாளர், ஆசிரியர்

கல்வியும் பணியும் தொகு

லீலாவதி திரிசூர் மாவட்டம் குருவாயூருக்கு அருகிலுள்ள கோட்டபாடி என்ற ஊரில் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் 1927 இல் பிறந்தார். இவரது பள்ளி படிப்பை குன்னம்குளம் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை எர்னாக்குளம் மஹாராஜா கல்ல்லூரியிலும் (B .A ) இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை (M .A ) சென்னனை பல்கலை கழகத்திலும் பயின்றார். அவரது கல்விப்பணி 1949 இல் பேராசிரியராக செயின்ட் மேரிஸ் கல்லூரி திரிசூரில் தொடங்கியது. தொடர்ந்து சென்னையில் உள்ள ஸெடல்லா மேரிஸ் கல்லூரியிலும் 1952 ஆம் ஆண்டு பாலக்காடு விகடோரிய கல்ல்லூரியிலும் பணியபுரிந்தார். மஹாராஜா கல்லூரியிலும் அரசு பெரினன் கல்லூரி - தாலசெரி ஆகியவற்றில் பணிபயாற்றியுள்ளார்.

இவர் தனது முனைவர்பட்டப்படிப்பை கேரளா அரசு கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இவரது விவுரையாளராக கோழிகோடு (calicat) கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். பேரினன் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.தற்பொழுது திரிக்கவோ என்ற ஊரில் (எர்ணாகுளம் மாவட்டம்) வாழ்ந்து வருகிறார்.

விருதுகள் தொகு

  1. ஓடக்குழல் விருது (1978)
  2. கேரளா சாகித்ய அகாடமி விருது (1980)
  3. கேந்திர சாகித்ய அகாடமி விருது (1986)
  4. வள்ளத்தோள் (2002)
  5. பஸீர் விருது (2005)
  6. குப்தன் நாயர் நினைவு விருது (2007)
  7. வயலார் ராமவர்மா விருது (2007)
  8. FACTMAKK நாயர் விருது (2009)
  9. பத்மஸ்ரீ விருதுக்காக இவர் மலையாள இலக்கியம் மற்றும் கல்வியியல் துறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
  10. கேரளஅரசின் உயர்ந்த பட்ச விதான எழுதசன் புரஸ்கரம் என்ற விருது (2010)
  11. மாத்ருபூமி இலக்கிய விருது (2011)
  12. P.S ஜான் விருது (2011)
  13. K.P. கேசவ மேனன் விருது (2014

மேற்கோள்கள் தொகு

  1. "Nayar award for M. Leelavathy". தி இந்து. 2 October 2009 இம் மூலத்தில் இருந்து 6 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091006042813/http://www.hindu.com/2009/10/02/stories/2009100254620600.htm. பார்த்த நாள்: 2 May 2010. 
  2. Paniker, Ayyappa. K. M. George. ed. Modern Indian Literature, An Anthology. 2. சாகித்திய அகாதமி. பக். 254–255. https://books.google.com/books?id=m1R2Pa3f7r0C&pg=PA255&dq=M.+Leelavathy&num=100&cd=18#v=onepage&q=M.%20Leelavathy&f=false. 
  3. "Padma Shri Awardees". india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2 May 2010.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._லீலாவதி&oldid=3935066" இலிருந்து மீள்விக்கப்பட்டது