எம். விசயசாரதி
தமிழக அரசியல்வாதி
எம். விசயசாரதி (M. Vijayasarathy மறைவு: 7 சூன், 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1980 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] எம். ஜி. இராமச்சந்திரன் தலைமையிலான அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 1984 சட்டமற்த் தேர்தலில் மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அரசியலில் தீவிரமாக செயல்படாமல் இருந்துவந்தார்.
எம். விசயசாரதி | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 7 சூன், 2021 ஆந்திரப்பிரதேசம், சத்தியவேடு |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழிடம்(s) | தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
ஆந்திரமாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்துவந்த விசயசாரதி 2021, சூன், 7 அன்று உடல் நலக் குறைவால் தன் 67வது வயதில் இறந்தார்.[2]
வகித்த பதவிகள்
தொகுசட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1980 | அரக்கோணம் | அஇஅதிமுக |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி மறைவு, செய்தி, 2021, சூலை, 8. இந்து தமிழ்