மா. வி. காமத்

(எம். வி. காமத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். வி. காமத் பிரசார் பாரதியின் முன்னாள் தலைவர். மேலும் முதுபெரும் பத்திரிக்கையாளரும் ஆவார். எம். வி. காமத் தனது 93 ஆவது வயதில், 09-10-2014 அன்று உடுப்பியில் (கர்நாடகம்) மரணமடைந்தார். 1921 ஆம் ஆண்டு பிறந்த காமத் பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்தவர்.[1][2] 1969 முதல் 1978 வரை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் வாஷிங்டன் பொறுப்பாளராக காமத் பதவி வகித்துள்ளார். அதே சமயம் அவர் தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா இதழின் செய்தி ஆசிரியராகவும் பதவி வகித்துள்ளார்.

பத்திரிகைத் துறையில் அவரது சிறந்த பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

நரேந்திர மோதி வாழ்க்கை வரலாறு குறித்த, “Narendra Modi — The Architect of a Modern State” என்ற புத்தகத்தை 2009-ல் எழுதியுள்ளார். [3].

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-10. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
  2. http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/veteran-journalist-mv-kamath-dies-114100900044_1.html. மும்பையில், 1946 ஆம் ஆண்டு 'தி ஃபிரீ பிரஸ் ஜர்னல்' பத்திரிகையில் நிருபராகத் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய காமத், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் வாய்ந்தவர். மூத்த இதழாளர் எம்.வி. காமத் மறைவு - நரேந்திர மோடி இரங்கல்
  3. http://tamil.thehindu.com/india/மூத்த-பத்திரிகையாளர்-எம்விகாமத்-காலமானார்/article6484531.ece[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._வி._காமத்&oldid=3590932" இலிருந்து மீள்விக்கப்பட்டது