எயார் கனடா விமானம் 624

எயார் கனடா விமானம் 624 (Air Canada Flight 624 -AC624/ACA6) இரக உள்நாட்டு பயணிகள் வானூர்தி, 2015 மார்ச்சு 29ம் திகதி, உள்ளூர் காலப்படி (03:43 UTC), கனடாவின் ஆளிபக்சு சர்வதேச வானூர்தி தளத்தில் (Halifax International Airport) தரையிறக்க முற்பட்டபோது கடும் பனிப்பொழிவும் குறுகிய ஓடுபாதையும் காரணமாக நிலைநிறுத்த இயலாமையால் விபத்துக்குள்ளானது.[1][2][3]

எயார் கனடா விமானம் 624
சி-எப்டிஜேபி FTJP, விபத்துக்குள்ளான விமானம், ஏப்ரல் 2008 இன் படங்கள்
சி எப்டிஜேபி FTJP, விபத்துக்குள்ளான விமானம், ஏப்ரல் 2008 இல் படங்கள்
விபத்து சுருக்கம்
நாள்2015 மார்ச்சு 29
சுருக்கம்குறுகிய ஓடுதள தரையிறக்கம்
இடம்ஹ்யாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம்
44°52'2.08"N 63°31'33.79"W
பயணிகள்133
ஊழியர்5
காயமுற்றோர்23
உயிரிழப்புகள்0
தப்பியவர்கள்138 (அனைவரும்)
வானூர்தி வகைஎயர் பேருந்து A320 family#A320
இயக்கம்எயர் கனடா
வானூர்தி பதிவுசி- எப்டிஜேபி C-FTJP
பறப்பு புறப்பாடுடொராண்டோ பியர்சன் சர்வதேச விமான தளம், தொராண்டோ, கனடா
சேருமிடம்ஹ்யாலிஃபாக்ஸ் ஸ்டான்ஃபீல்டு சர்வதேச விமான தளம், கனடா

இவ்விபத்தில் உயிராபத்து ஏதுமில்லை என்றபோதிலும், 23 நபர்கள் காயமடைந்து மருத்துவ உதவி பெற்று சென்றனர். எயார் கனடா விமானம் 624 விபத்தின்போது 133 பயணிகளும் விமானிகள் உள்பட 5 சேவைபணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக (138 அனைவரும்) உயிர் தப்பினர்.[4] இருப்பினும் இந்த விபத்தின் காரணமாக [5] ஓடுபாதை பெரும் சேதமடைந்தமையால் மின்னிணைப்புகள் பழுதடைந்து சிறிதுகாலம் விமானநிலையச் சேவை தடைபட்டிருந்தது.

சான்றாதாரங்கள்

தொகு

உப இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எயார்_கனடா_விமானம்_624&oldid=3972331" இலிருந்து மீள்விக்கப்பட்டது