எய்னோ பிங்கெல்மான்
எய்னோ பிங்கெல்மான் (Heino Finkelmann) என்பவர் செருமன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கரிம வேதியியலாளர் ஆவார். செருமனியின் உலோயர் சாக்சோனி மாநிலத்திலுள்ள குரோனாவ் என்ற நகரத்தில் இவர் பிறந்தார். [1]) திரவ-படிக எலாசுடோமர் என்ற பலபடியின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற அறிவியலாளராக இவர் கருதப்படுகிறார். [2]
எய்னோ பிங்கெல்மான் Heino Finkelmann | |
---|---|
பிறப்பு | 1945 செருமனி, உலோயர் சாக்சோனி, குரோனாவ் |
துறை | கரிம மற்றும் பலபடி வேதியியல் |
பணியிடங்கள் | பேதெர்பார்ன் பல்கலைக்கழகம் யோகன்னசு குட்டன்பெர்க்கு மெயின்சு பல்கலைக்கழகம் கிளாசுதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பிரீபர்க் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆர்சுட் சிடெக்மேயர் |
அறியப்படுவது | பலபடி வேதியியல் |
வாழ்க்கை வரலாறு
தொகுபொறியியலில் பட்டம் பெற்ற பின்னர், பிங்கெல்மான் 1972 ஆம் ஆண்டு பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியலாளராக பட்டம் பெற்றார். [1] 1975 ஆம் ஆண்டு இவர் ஆர்சுட் சிடெக்மேயரின் மேற்பார்வையில் பேதெர்பார்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [3][1]
யோகன்னசு குட்டன்பெர்க்கிலுள்ள மெயின்சு பல்கலைக்கழகத்தில் எல்மட் இரிங்சுதார்ப் வழிகாட்டுதலின் கீழ் பிங்கெல்மான் முனைவர் பட்டமேற்படிப்பு முடித்தார். [1] மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பிங்கெல்மான் 1978 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை கிளாசுதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் குந்தர் இரிகேச் குழுவுடன் பணிபுரிந்தார். [1][4][5]
1984 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை பிரீபர்க்கின் ஆல்பர்ட் உலுத்விக் பல்கலைக்கழகத்தில் முழுமையான ஒரு பேராசிரியராகவும், பெருமூலக்கூற்று வேதியியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் பிங்கெல்மான் நியமிக்கப்பட்டார். நீர்ம-படிக எலாசுடோமர் என்ற பலபடியின் பக்கச் சங்கிலி கோட்பாடு பிங்கெல்மானின் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும். [6]
விருதுகளும் சிறப்புகளும்
தொகு- 1984: செருமன் வேதியிலாளர் கழகம் வழங்கிய காரல் தூசுபெர்கு நினைவு பரிசு.[5][7]
- 2000: கே லூசக் அம்போல்ட்டு பரிசு[5]
- 2003: ஐரோப்பிய இயற்பியல் கழகம் வழங்கிய இயற்பியல் விருது[5]
- 2004: பிரான்சு நாட்டின் டவுலூசு பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ முனைவர் பட்டம்[5][8]
- 2006: பிரித்தானிய நீர்ம-படிக கழகம் வழங்கிய கியார்ச்சு வில்லியம் கிரே பதக்கம்[9][5][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Lebenslauf Prof. Dr. Heino Finkelmann" [CV Prof. Dr. Heino Finkelmann]. chemie.uni-freiburg.de (in German). Universität Freiburg. 10 March 2006. Archived from the original on 2006-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 "Heino Finkelmann". degruyter.com (in ஜெர்மன்). Kürschners Deutscher Gelehrten-Kalender Online. பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.
- ↑ "Curriculum Vitae Prof. Dr. Heino Finkelmann". Archived from the original on 2004-07-03. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
- ↑ uni'leben, die Zeitung der Universität Freiburg (PDF) (in ஜெர்மன்). Albert-Ludwigs-Universität Freiburg, der Rektor, Prof. Dr. Hans-Jochen Schiewer. 2010. p. 11. பன்னாட்டுத் தர தொடர் எண் 0947-1251.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Ansgar Komp, Antoni Sanchez-Ferrer, Kirsten Severing (2010-02-01). "Heino Finkelmann: 65 Years of Devotion to Science". Macromolecular Chemistry and Physics 211 (3): 373. doi:10.1002/macp.200900669.
- ↑ Mark Warner, Eugene Michael Terentjev,Liquid Crystal Elastomers, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-852767-1 (Hbk.), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-921486-0 (Pbk.) p. 126
- ↑ "GDCh-Preise - Carl-Duisberg-Gedächtnispreis". gdch.de (in ஜெர்மன்). Gesellschaft Deutscher Chemiker e.V. (GDCh) / German Chemical Society. 2019-07-10. பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.
- ↑ Albert-Ludwigs-Universität Freiburg, ed. (2004-10-05). "Freiburger Unimagazin – ALBERT-LUDWIGS-UNIVERSITÄT FREIBURG" (PDF) (in ஜெர்மன்). Freiburg im Breisgau, Germany: Promo Verlag GmbH. p. 18. பன்னாட்டுத் தர தொடர் எண் 0947-1251. Archived from the original (PDF) on 2018-02-11. பார்க்கப்பட்ட நாள் 2018-02-11.
- ↑ "Gray Medal". blcs.eng.cam.ac.uk. British Liquid Crystal Society. 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-13.