எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு

செருமானிய நோபல் வேதியியலாளர்

எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு (Heinrich Otto Wieland) (4 சூன் 1877 – 5 ஆகத்து 1957) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். இவர் பித்த அமிலங்கள் தொடர்பான இவரது ஆய்வுகளுக்காக 1927 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றவர் ஆவார்.[1][2]

எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு
எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டு
பிறப்பு(1877-06-04)4 சூன் 1877
பிஃபொர்செய்ம், பேடன், செருமனி
இறப்பு5 ஆகத்து 1957(1957-08-05) (அகவை 80)
இசுடார்ன்பெர்க், பவேரியா, மேற்கு செருமனி
தேசியம்செருமானியர்
துறைவேதியியல்
பணியிடங்கள்முனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (1913–1921),
பிரீபர்க் பல்கலைக்கழகம் (1921–25),
மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் 1925–
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்யோகன்னசு தீயல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ரோல்ப் உய்ஸ்ஜென்,
லியோபோல்ட் ஹார்னெர்
அறியப்படுவதுபித்த அமிலங்கள் தொடர்பான ஆய்வு
விருதுகள்

இவர் முனிச், பெர்லின் மற்றும் ஸ்டட்கார்ட் பல்கலைக்கழகங்களில் படித்தார். பின்னர் முனிச்சில் உள்ள பேயர் ஆய்வகத்திற்குத் திரும்பினார், அங்கு அவர் 1901 இல் ஜோகன்னஸ் தியேலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். இதன் பின்னர் தொடர்ந்து கற்பித்தலில் ஈடுபடவும், ஆய்வுகளில் ஈடுபடவும் முனிச்சிலேயே தங்கினார். 1925 ஆம் ஆண்டில் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் அமர்ந்தார். இந்தப் பதவியில் 1950 ஆம் ஆண்டு தனது பணி ஓய்வு பெறும் வரை இதே பணியில் தொடர்ந்தார். கரிம சேர்மங்களில் உள்ள நைட்ரஜனின் பல்வேறு வடிவங்களைக் கண்டறிந்து வேறுபடுத்தி அறிவது தொடர்பான தனது கண்டுபிடிப்புகளுடன் (1911) வீய்லேன்டு மூலக்கூறுகளின் கட்டமைப்பு கரிம வேதியியலில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார். இதைத் தொடர்ந்த ஆண்டுகளில் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் பித்த அமிலங்கள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். அவர் தனிமைப்படுத்திய மூன்று அமிலங்கள் கொழுப்பு தொடர்பான ஒத்த கட்டமைப்பின் ஸ்டீராய்டுகள் என்பதை அவர் கண்டறிந்தார். பல பதின்ம ஆண்டு காலமாக வீய்லேண்டின் கவனம் கரிம நைட்ரஜன் சேர்மங்களைச் சூழந்தே இருந்தது. ஆல்கீன்கள் மற்றும் அரோமேடிக் சேர்மங்களுடன் நைட்ரஜன் ஆக்சைடுகளின் வினை, பியூரோக்சேன்களின் தெளிவுபடுத்தல் மற்றும் ஃபுல்மினிக் அமிலம் மற்றும் அதன் பலபடியாக்கல் ஆகியவற்றுக்கான மரபு சார் பரிசோதனைகள் பற்றிய இவரது சிறந்த ஆய்வுகள் உதாரணங்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Karrer, P. (1958). "Heinrich Wieland 1877-1957". Biographical Memoirs of Fellows of the Royal Society 4: 341–352. doi:10.1098/rsbm.1958.0026. 
  2. Bernhard Witkop (1993). "Remembering Heinrich Wieland (1877-1957) portrait of an organic chemist and founder of modern biochemistry". Medicinal Research Reviews 12 (3): 195–274. doi:10.1002/med.2610120303. பப்மெட்:1578969. https://zenodo.org/record/1229293. 
  3. "The Nobel Prize in Chemistry 1927". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.