எய்லீன் கொஞ்சேல்சு

எய்லீன் கொஞ்சேல்சு (Eileen Gonzales) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் கார்னெல் பல்கலைக்கழக வானியல் துறையில் முதுமுனைவர் ஆய்வுறுப்பினராக உள்ளார். அங்கே இவர் புறவெளிக் கோள்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இவர் இயற்பியலில் கருப்பர் எனும் இயக்கத்திம் இணை நிறுவனரும் ஆவார். இந்த இயக்கம் கருப்பின இயற்பியலாளர் ஏற்பிற்காகவும் முன்னேற்றத்துக்காகவும் போராடிவரும் அமைப்பாகும்.

எய்லீன் கொஞ்சேல்சு
Eileen Gonzales
துறைவானியற்பியல், வானியல், புறவெளிக் கோள்கள், பழுப்புக் குறுமீன்கள், தாழ்பொருண்மை விண்மீன்கள்
பணியிடங்கள்கார்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் மாநகரப் பல்கலைக்கழகம், சான் பிரான்சுசுக்கோ மாநிலப் பல்கலைக்கழகம்
ஆய்வேடுஉடுக்கண, துணை உடுக்கண எல்லையிடை வளிமண்டலங்களின் புரிதல் (2020)
ஆய்வு நெறியாளர்யாக்குவெலைன் கே. பாகெர்த்தி

இளமையும் கல்வியும்

தொகு

இவர் வர்ஜீனியா கடற்கரையில் வளர்ந்துள்ளார். மிச்சிகான் மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் படித்து, தன் மூதறிவியல் பட்டத்தைச் சான் பிரான்சிசுக்கோ பல்கலைக்கழகத்தில்இருந்து பெற்றார்.[1][2] பிறகு இவர் நியூயார்க் மாநகரப் பல்கலைக்கழகத்தின் மேற்பட்டப் படிப்பு மையத்தில் சேர்ந்து அன்ட்டர் கல்லூரியில் முதுகலைபாட்டமும் இயற்பியலில் மூதாய்வர் பட்டமும் பெற்றார். இவர் 2020 இல் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.[3][4] இவர் தன் முனைவர் ஆய்வின்போது, தாழ்பொருண்மை விண்மீன்களின் வளிமண்டல நிலைமைகளையும் பழுப்புக் குறுமீன்களின் வளிமண்டல நிலைமைகளையும் ஆய்வு செய்துள்ளார்.[5][6][7][8]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்

தொகு

இவர் கார்னெல் பல்கலைக்கழக வானியல் துறையில் ஆய்வுநல்கை பெற்று 51 பெகாசி b ஆய்வுறுப்பினராகச் சேர்ந்துள்ளார், இங்கு இவர் புறவெளிக் கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய நோக்கீட்டு வானியல் நுட்பங்களையும் அறிவையும் கோட்பாட்டு இயற்பியல் அறிவையும் பயன்படுத்துகிறார்.[9][10] இவர் கார்னெல் பல்கலைக்கழக வானியல் துறையில் ஆய்வுநல்கை பெற்று 51 பெகாசி b ஆய்வுறுப்பினராகச் சேர்ந்துள்ளார், இங்கு இவர் புறவெளிக் கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய நோக்கீட்டு வானியல் நுட்பங்களையும் அறிவையும் கோட்பாட்டு இயற்பியல் அறிவையும் பயன்படுத்துகிறார்.[9][10] குறிப்பாக, பழுப்புக் குறுமீன்களின் முகிலை ஆய்வு செய்ய முன்பு உருவாக்கிய நுட்பங்களைக் கையாண்டு, பெருவளிமப் புறவெளிக் கோள்களை ஒத்த உடுக்கண வான்பொருள்கள்ன் வளிமண்டலங்களை ஆய்வு செகிறார்.[11][12] இவர் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் வருகைதரு அறிவியலாளராகவும் உள்ளார்.[13]

பரப்புரையும் கருப்பின முன்னேற்றமும்

தொகு

இவர் அறிவியல் கல்வியிலும் பரப்புரைத் திட்டங்களிலும் ஈடுபடுகிறார். இவர் முனவர் பட்டம் படிக்கும்போது அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை மேற்பார்வையிட்டு வழிநடத்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு வானியலையும் கற்பித்துள்ளார்.[14][15] இவர் சார்லசு டி. பிரவுனுடனும், யெசீக்கா எசுகுவிவேவுடனும் இணைந்து முதன்முதலாக கருப்பின இயற்பியலாளர் வாரத்தை முன்னின்று நடத்தினார். இந்நிகழ்வு கருப்பின இயற்பியலாளர்களை முன்னிறுத்தவும் அவர்களது அறிவியல் கொடையைக் கொண்டாடவும் நடத்தப்பட்டது.[16] கருப்பின பறவையாளர் வாரத்தைப் போன்ற கருப்பினத் திட்டங்களுக்கு நிகராக பரப்புரை பலரது கவனத்தை ஈர்த்து வெற்றியை ஈட்டியது. இவரை ஆதரித்த நிறுவனங்களில் இயற்கை இயற்பியல்,[17] அமெரிக்க இயற்பியல் நிறுவனம்,[16] இயற்பியல் இன்று]],[18] இயற்பியல் உலகம் ஆகியன ஆகும்.[19] இயற்பியலில் கருப்பினம் அமைப்பு கருப்பின இயற்பியலாருக்கு உரிய சமூக ஏற்பை உறுதி படுத்தவும் அவர்கள் சந்தித்துவரும் சமூக, அரசியல் அறைகூவல்களைப் பற்றிய விழிப்புணர்வை வென்றடுக்கவும் அறிவியலில் அவர்களது முன்காட்டுப் பாத்திரத்தை வெளிப்படுத்தவும் போராடி வருகிறது.[20]

மேற்கோள்கள்

தொகு
  1. Gonzales, Eileen; Fries, Adam; Cool, Adrienne (2015-01-01). Testing the refurbished 30-inch Leuschner telescope and its exoplanet detection capabilities. 225. பக். 258.04. http://adsabs.harvard.edu/abs/2015AAS...22525804G. 
  2. "Eileen Gonzales Bio". ecgonzales.github.io. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  3. Gonzales, Eileen (2020-09-01). "Understanding Atmospheres Across the Stellar-Substellar Boundary". Dissertations, Theses, and Capstone Projects. https://academicworks.cuny.edu/gc_etds/4076. 
  4. "CUNY Astro – Astronomy & Astrophysics Research at CUNY". cunyastro.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  5. Faherty, Jacqueline K.; Gagné, Jonathan; Burgasser, Adam J.; Mamajek, Eric E.; Gonzales, Eileen C.; Bardalez Gagliuffi, Daniella C.; Marocco, Federico (2018-11-16). "A Late-type L Dwarf at 11 pc Hiding in the Galactic Plane Characterized Using Gaia DR2" (in en). The Astrophysical Journal 868 (1): 44. doi:10.3847/1538-4357/aadd04. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. https://doi.org/10.3847/1538-4357/aadd04. 
  6. Gonzales, Eileen C.; Faherty, Jacqueline K.; Gagné, Jonathan; Teske, Johanna; McWilliam, Andrew; Cruz, Kelle (2019-11-29). "A Reanalysis of the Fundamental Parameters and Age of TRAPPIST-1" (in en). The Astrophysical Journal 886 (2): 131. doi:10.3847/1538-4357/ab48fc. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. https://doi.org/10.3847/1538-4357/ab48fc. 
  7. Gonzales, Eileen C.; Burningham, Ben; Faherty, Jacqueline K.; Cleary, Colleen; Visscher, Channon; Marley, Mark S.; Lupu, Roxana; Freedman, Richard (2020-12-10). "Retrieval of the d/sdL7+T7.5p Binary SDSS J1416+1348AB" (in en). The Astrophysical Journal 905 (1): 46. doi:10.3847/1538-4357/abbee2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1538-4357. https://doi.org/10.3847/1538-4357/abbee2. 
  8. Zagorac, Luna (2020-10-14). "Brown Dwarf Weather Forecast: Cloudy or Clear Skies?". astrobites (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  9. 9.0 9.1 "Cornell linked to three 51 Pegasi b astronomy postdocs". Cornell Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  10. 10.0 10.1 Hershberger, Scott. "#BlackInPhysics week to build community, increase visibility". symmetry magazine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  11. "Eileen Gonzales, Ph.D. candidate". Heising-Simons Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  12. (in en) Meet the organizers of #BlackInPhysics Week. doi:10.1063/pt.6.4.20201026b/full/. https://physicstoday.scitation.org/do/10.1063/PT.6.4.20201026b/full/. 
  13. "Eileen Gonzales CV". ecgonzales.github.io. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  14. "She's Into the Coolest Stars". www.gc.cuny.edu. Archived from the original on 2021-01-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  15. "International Astronomical Union | IAU". www.iau.org. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  16. 16.0 16.1 "AIP Showcases #BlackinPhysics Week with Essays, Oral Histories, Social Media Outreach". www.newswise.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  17. Brown, Charles D.; Gonzales, Eileen (January 2021). "Excellence and power in the Black physics community" (in en). Nature Physics 17 (1): 3–4. doi:10.1038/s41567-020-01140-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1745-2481. https://www.nature.com/articles/s41567-020-01140-9. 
  18. "#BlackInPhysics Week essay series". Physics Today. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.{{cite web}}: CS1 maint: url-status (link)
  19. "#BlackInPhysics". Physics World (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
  20. "The challenges facing Black physicists". Physics World (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-11-02. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்லீன்_கொஞ்சேல்சு&oldid=3931152" இலிருந்து மீள்விக்கப்பட்டது