எரால்டு டெனிசு டைலர்
எரால்டு டெனிசு டைலர் (Harold Dennis Taylor) 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த வில்லை வடிவமைப்பாயர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். கூக்கின் மும்மை வில்லை இவரது முக்கிய கண்டுபிடிப்பாகும். 50 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றவராவார்.[1]
எரால்டு டெனிசு டைலர் | |
---|---|
பிறப்பு | 1862 இங்கிலாந்து |
இறப்பு | 26 பிப்ரவரி, 1943 |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | ஒளியியல் |
பணியிடங்கள் | கூக் நிறுவனம் |
அறியப்படுவது | கூக்கின் மும்மை வில்லையை உருவாக்கியது. |
1893 ஆம் ஆண்டில் கூக்கின் மும்மை வில்லை வடிவமைப்புக்காகக் காப்புரிமையும்[2], 1933 இல் டட்டல் பதக்கத்தையும் (Duddell Medal and Prize) பெற்றார்.[3]
அவர் சாருலோட் பெர்னான்டசு பார்ஃப் (Charlotte Fernandes Barff) என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருந்தனர்.
-
கூக்கின் மும்மை வில்லை வரைவுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ brief bio of H. Dennis Taylor from europa.com
- ↑ [British Patent 22607, Nov 25, 1893.]
- ↑ "Mr. H. Dennis Taylor". Nature 133 (3360): 442. 24 March 1934. doi:10.1038/133442b0. https://archive.org/details/sim_nature-uk_1934-03-24_133_3360/page/442.
வெளியிணைப்புகள்
தொகு- எரால்டு டெனிசு டைலர் எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்: