கூக்கின் மும்மை வில்லை
கூக்கின் மும்மை வில்லை (Cooke triplet) என்பது ஒரு ஒளிப்படக்கருவி வில்லையாகும். 1893 ஆம் ஆண்டு கூக் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கெரால்டு டெனிசு டைலரால் காப்புரிமைப் (காப்புரிமை எண் GB 22,607) பெறப்பட்டது. ஒளியின் பாதையில் ஏற்படும் அனைத்து வகைப் பிறழ்ச்சிகளையும் நீக்க உதவியது.
அமைப்பு
தொகுகூக்கின் மும்மை வில்லை ஒரு புறம் எதிர்மறை தீக்கல் கண்ணாடியும் அதன் இரு புறமும் கிரெளன் கண்ணாடியும் பயன்படுத்தப்படும் அமைப்பாகும். இவை அனைத்தின் ஒளி விலகல் எண்களின் கூடுதல் சுழியாக இருக்கும். மொத்தத்தில் இந்தக் கூட்டு வில்லை குவி வில்லையாகச் செயல்படுகிறது.
கூக்கின் மும்மை வில்லை புகைப்படக்கருவிகளிலும், செல் பேசிகளிலுள்ள புகைப்படக் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பயன்கள்
தொகுஇன்றளவும் புகைப்படக்கருவிகளில், இவ் வகை வில்லைகள் பயன்படுத்தப்படுகிறது.
இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கிகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது. திரைவில்லைப் படங்காட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
-
மும்மை வில்லைக் கொண்ட ஒரு புகைப்படக்கருவி.
-
திரைவில்லைப் படங்காட்டிகளில் பயன்படுத்தப்படும் 35 மிமீ கொண்ட மும்மை வில்லை
-
மற்றொரு வகை மும்மை வில்லை