எரால்டு டெனிசு டைலர்

(கெரால்டு டெனிசு டைலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எரால்டு டெனிசு டைலர் (Harold Dennis Taylor) 1862 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த வில்லை வடிவமைப்பாயர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். கூக்கின் மும்மை வில்லை இவரது முக்கிய கண்டுபிடிப்பாகும். 50 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெற்றவராவார்.[1]

எரால்டு டெனிசு டைலர்
பிறப்பு1862
இங்கிலாந்து
இறப்பு26 பிப்ரவரி, 1943
தேசியம்ஆங்கிலேயர்
துறைஒளியியல்
பணியிடங்கள்கூக் நிறுவனம்
அறியப்படுவதுகூக்கின் மும்மை வில்லையை உருவாக்கியது.

1893 ஆம் ஆண்டில் கூக்கின் மும்மை வில்லை வடிவமைப்புக்காகக் காப்புரிமையும்[2], 1933 இல் டட்டல் பதக்கத்தையும் (Duddell Medal and Prize) பெற்றார்.[3]

அவர் சாருலோட் பெர்னான்டசு பார்ஃப் (Charlotte Fernandes Barff) என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரால்டு_டெனிசு_டைலர்&oldid=3520866" இலிருந்து மீள்விக்கப்பட்டது