எரிகலப்பி (carburetor, அல்லது carburettor) என்பது உள் எரி பொறிகளில் எரிமத்தையும் காற்றையும் எரிதலுக்காகக் குறிப்பிட்ட சில விகிதங்களில் கலக்கக் செய்யும் ஒரு கருவி ஆகும்.[1] எரிகலப்பிகள் வாகனங்களில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி மூலம் விமானப் போக்குவரத்திலும், சில வேளைகளில் சிறிய விசைப்பொறிகளான புல் அறுப்பிகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இயங்கும் விதம்

தொகு

எரிகலப்பிகள் பெர்னூலியின் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது: வேகமாகக் காற்று செலுத்தப்படும் போது, அதன் நிலை அழுத்தம் குறைகிறது, அதன் இயக்கநிலை அழுத்தம் அதிகரிக்கிறது. விசைப்பொறியின் உள்ளிழுவாயில் திறந்து உள் இழுக்கபடும் காற்றானது ஒரு குறுகிய புனல் போன்ற அமைப்பின் வழியாக செலுத்தப்படும் போது அதிக வேகத்துடன் செல்லும். இந்த வேகம் வெற்றிடத்தை பெட்ரோலை கொண்டுவரும் குழாயில் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பெட்ரோல் உறிஞ்சபட்டு காற்றில் கலக்கப்படுகிறது. இந்த பெட்ரோல் காற்று கலவையானது எஞ்சினில் எரிய தயார் நிலையில் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Beale, Paul; Partridge, Eric (2003), Shorter Slang Dictionary, Routledge, p. 60, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134879519
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிகலப்பி&oldid=3378232" இலிருந்து மீள்விக்கப்பட்டது