எரிக் மாஸ்க்கின்

எரிக் ஸ்டார்க் மாஸ்க்கின் (Eric Stark Maskin) (பிறப்பு: திசம்பர் 12, 1950, நியூ யார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து வென்றார். மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வழிகோலியவர்கள் என்பதால் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.("for having laid the foundations of mechanism design theory.")

எரிக் மாஸ்க்கின்
05N3441 emaskin.jpg
பிறப்பு12 திசம்பர் 1950 (அகவை 69)
நியூயார்க்கு நகரம்
படிப்புமுனைவர் பட்டம், முனைவர்
படித்த இடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
பணிபொருளியலாளர்கள்
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்பொருளியல்
2007 ஆம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவருள் ஒருவரான எரிக் மாஸ்க்கின்

வாழ்க்கை வரலாறுதொகு

மார்ஸ்க்கின் 1950ல் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஏ. பி. பட்டமும், முனைவர் ஆய்வுப்பட்டமும் (பி.ஹெச்.டி, Ph.D) பெற்றார். பின்னர் 1976ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுனராகச் சென்றார். தற்பொழுது பிரின்ஸ்ட்டனில் உள்ள இன்ஸ்ட்டிட்யூட் ஃவார் அட்வான்ஸ்டு ஸ்டடி (உயர்கல்விக்கான கல்லூரி) என்னும் கல்லூரியில் குமுக அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஓ ஹிர்ஷ்மன் பேராசிரியராக உள்ளார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_மாஸ்க்கின்&oldid=2896227" இருந்து மீள்விக்கப்பட்டது