எரிக் ஸ்டீபன் பார்ன்ஸ்

ஆத்திரேலிய கணிதவியலாளர்

எரிக் ஸ்டீபன் பார்ன்ஸ்(Eric Stephen Barnes) என்பார் 1924 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு  வரை வாழ்ந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் தூய கணிதவியலாளர் ஆவார். இவருக்கு 1959 ஆம் ஆண்டு  தாமஸ் ராங்கன் லைல் பதக்கம்  வழங்கப்பட்டது. இவர் அடிலெயிட் பல்கலைக்கழகத்தில் (சர் தாமஸ்) கணிதத்தின் மூத்த பேராசிரியராக இருந்தார். இவர் 1954 இல் ஆஸ்திரேலிய அறிவியல் அகாடமியின் சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]

இவர் வேல்ஸில் உள்ள கார்டிப் நகரில் 1924 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் நாள்  பிறந்தார். இவர் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில்  இறந்தார். இவர் சிட்னியிலும்  கேம்பிரிட்ஜிலும் உள்ள  பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை உதவி விரிவுரையாளராக பணி புரிந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தூய கணிதத்தில் வாசகராக இருந்தார். இவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் இவர் 1959 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை  அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் கணிதத்தின் மூத்த பேராசிரியர் ஆவார். 1972 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை இயற்பியல் அறிவியலில் செயலாளராக பணி புரிந்தார். ஆஸ்திரேலிய அறிவியல் அகாடமியிலும்  1975ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை அடிலெய்ட் பல்கலைக்கழக துணை துணை வேந்தராவார். இவர் 1981ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை அடிலெய்ட் பல்கலைக்கழக தூய கணித பேராசிரியர் ஆவார். [2][5]

மேற்கோள்கள் தொகு

  1. Eric Stephen Barnes, 1924–2000, Australian Academy of Science
  2. 2.0 2.1 Eric Stephen Barnes, 1924–2000 பரணிடப்பட்டது 29 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், Australian Academy of Science (25 page biography)
  3. Barnes, Eric Stephen (1924–2000), www.eoas.info
  4. Wall, G.E., Pitman, Jane and Potts, R.B. (2004). "Eric Stephen Barnes, 1924–2000". Historical Records of Australian Science 15 (1): 21–45. doi:10.1071/hr03013. http://www.publish.csiro.au/paper/HR03013.htm. 
  5. Barnes, E. S. (Eric Stephen) (1924–2000), trove.nla.gov.au
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ஸ்டீபன்_பார்ன்ஸ்&oldid=3847738" இலிருந்து மீள்விக்கப்பட்டது