எரிபுதர்
Burning Bush (Euonymus alatus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. alatus
இருசொற் பெயரீடு
Euonymus alatus
(Thunb.) Siebold

எரிபுதர் (ஆங்:Burning Bush) (அறிவியல் பெயர்:Euonymus alatus) என்பது கிழக்காசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு புதர்ச்செடி. இது சீனாவின் வடக்கு, நடுப்பகுதிகளிலும், நிப்பொன், கொரியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. ஏறத்தாழ 8 அடி உயரம் வளரக்கூடியது.

பொதுவாக இதன் இலைகள் கரும் பச்சையாக இருக்கும். இலையுதிர்க் காலத்தில் இவை நல்ல செந்நிறமாக மாறிவிடும். இந்த செந்நிற இலைகள், புதர் எரிவது போன்று தோற்றமளிப்பதால் எரியும் புதர் எனப்பொருள் தரும் பர்னிங் புஷ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இத்தாவரம் ஒரு அழகுச் செடியாக 1860-ஆம் ஆண்டு வாக்கில் வட அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப் பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Swearingen, J., K. Reshetiloff, B. Slattery, and S. Zwicker. (2002). "Winged Burning Bush". Plant Invaders of Mid-Atlantic Natural Areas. National Park Service and U.S. Fish & Wildlife Service.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபுதர்&oldid=2225092" இலிருந்து மீள்விக்கப்பட்டது