எரிமலைத் தீவு
நிலவியலில் அல்லது தொல்லியலில் எரிமலைத் தீவு (volcanic island) அல்லது உயர் தீவு (high island) எனப்படுவது எரிமலையால் உருவாக்கப்பட்ட தீவைக் குறிக்கும். இதற்கு எதிர்மாறான தாழ் தீவு (low island) எனப்படுவது பவளப் பாறைகளின் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளினால் உருவான தீவுகளைக் குறிக்கும்.[1]
பல எண்ணிக்கையான உயர் தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில அடிகள் உயரத்துக்கே எழும்பக்கூடியவையாகக் காணப்படுகின்றன. இவை பொதுவாக குறுந்தீவுகள் (islets) என அழைக்கப்படுகின்றன. அதே வேளையில் மக்கடேயா, நவூரு, நியுவே, என்டர்சன் தீவு, பனாபா தீவு போன்ற தாழ் தீவுகள் பல நூற்றுக்காணக்கான அடிகள் உயரத்திற்கு வளர்ச்சியடைந்தவை.
இவ்விரண்டு வகைத் தீவுகளும் பொதுவாக அருகருகே காணப்படும். குறிப்பாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகளில் தாழ் தீவுகள் பல உயர் தீவுகளைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Raymond E. Murphy: "'High' and 'Low' Islands in the Eastern Carolines", Geographical Review, Vol. 39, No. 3, Jul., 1949. Retrieved 2011-09-22.