எருமேலி தர்மசாஸ்தா கோயில்

கேரளத்திலுள்ள ஐயப்பன் கோயில்

எருமெலி தர்மசாஸ்தா கோயில் (Erumely Sree Dharmasastha Temple) என்பது தென்னிந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலாகும் . இந்த கோயிலானது ஐயப்பன் அல்லது தர்மசாஸ்தாவுக்கான கோயிலாகும். இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். [1]

எருமேலி தர்மசாஸ்தா கோயில்
எருமேலி தர்மசாஸ்தா கோயில் is located in கேரளம்
எருமேலி தர்மசாஸ்தா கோயில்
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:எருமேலி
ஏற்றம்:49 m (161 அடி)
ஆள்கூறுகள்:9°28′16″N 76°45′54″E / 9.4710933°N 76.7650384°E / 9.4710933; 76.7650384
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாரம்பரிய பாணி

கோயில் தொகு

எருமேலி நகரில் இரண்டு கோயில்கள் உள்ளன. இந்த கோயில் வல்லியம்பலம் என்றும் மற்றொன்று கொச்சம்பலம் என்று அழைக்கப்படுகிறது . இரண்டு கோயில்களும் 0.5 கி.மீ க்குள் அமைந்துள்ளன. சபரிமலை யாத்திரையின் போது புகழ்பெற்ற எருமெலி பாட்டத்துள்ளல் சடங்கானது வல்லியம்பலம் மற்றும் கொச்சம்பலம் அருகே துவங்குகிறது. இந்தக் கோயிருக்கு அருகில்தான் எருமேலி 'வாவர் மசூதி' அமைந்துள்ளது. இந்தக் கோயிலை ஒட்டிய பகுதியில்தான் திருவாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் செய்யபட்ட யாத்ரீகர்களுக்கு தங்குமிடம், உணவு, நீர் போன்ற வசதிகள் உள்ளன. 'தாழமோன் மடம் கோயிலின் தாந்த்ரீக உரிமைகளைக் கொண்டுள்ளது. [2]

திருவிழா தொகு

கோயில் ஆண்டுத் திருவிழா (உற்சவம்) பிப்ரவரி மாதத்தில் (கும்பம்) 10 நாட்கள் நடத்தப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. [3]

படக்காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Temples in Kottayam district".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "✍pedia - Erumely Sree Dharma Sastha Temple" (in en-US). ✍pedia. 2011-12-01. http://pedia.desibantu.com/erumely-sree-dharma-sastha-temple/. 
  3. "Sree Dharmasastha temple-Erumely".