எர்ம் (சிற்பம்)

ஒரு கற்கம்பத்தின் உச்சியில் மனித தலை கொண்டதாக, பெரும்பாலும் மார்பளவு சிலை கொண்டதாகவும் அதன் க

எர்ம் (Herm (sculpture), பண்டைக் கிரேக்கம்ἑρμῆς , pl. ἑρμαῖ ஹெர்மாய் ), [1] பொதுவாக ஆங்கிலத்தில் ஹெர்ம், என்று அழைக்கப்படுவது செவ்வக வடிவ கற்கம்பத்தின் உச்சியில் மனித தலை உள்ளவாறு செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் ஆகும். பொதுவாக சிற்பத்தின் அடியில் உள்ள கம்பத்தில் ஆண் குறி பொருத்தமான உயரத்தில் செதுக்கப்பட்டு இருக்கும். இந்த வடிவம் பண்டைய கிரேக்கத்தில் உருவானது. மேலும் இது ரோமானியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (மெர்குரியா என்று அழைக்கப்படுகிறது), மேலும் இது மறுமலர்ச்சி கால உருவங்கள் மற்றும் அட்லாண்டஸ் வடிவத்தில் புத்துயிர் பெற்றது.

ஏதெனியன் அகோராவில் இருந்த டெமோஸ்தீனசின் எர்மா, பாலியுக்டோசின் படைப்பு, சு. கிமு 280, கிளிப்டோதெக் அருங்காட்சியகம்

தோற்றம்

தொகு

துவக்கக் காலத்தில் கிரேக்க தெய்வங்கள் கற்குவியல் அல்லது வடிவமற்ற கல் அல்லது மரக் கம்பத்தின் வடிவத்தில் வணங்கப்பட்டனர். கிரேக்கத்தின் பல பகுதிகளில் சாலை ஓரங்களில், குறிப்பாக அவை சந்திக்கும் இடங்களிலும், நிலத்தின் எல்லைகளிலும் கற்குவியல்கள் இருந்தன. குறிப்பாக சாலைகளின் சந்திப்பைக் கடக்கும் ஒவ்வொரு வழிப்போக்கரும் இத்தகைய கற்குவியலில் ஒரு கல்லைப் எறிந்தோ அல்லது எண்ணெய் தடவுவதன் மூலம் சமய ரீதியிலான மரியாதை செலுத்தினர். [2] பின்னர் கம்பத்தில் ஒரு தலை மற்றும் நிமிர்ந்த ஆண்குறி சேர்க்கப்பட்டது. [3]

பயன்கள்

தொகு
 
எராக்கிளிசின் தலையுடன் கூடிய எர்மா (Hermherakles). பண்டைய மெஸ்சின் அருங்காட்சியகம், கிரேக்கம்

பண்டைய கிரேக்கத்தில், எர்மா சிலைகள் தீங்கையும் தீயசக்திகளைத் தடுக்கும் என்று கருதப்பட்டது. மேலும் இவை சாலை சந்திப்புகளிலும், நாட்டின் எல்லைகளிலும், கோயில்களுக்கு முன்பும், கல்லறைகளுக்கு அருகிலும், வீடுகளுக்கு வெளியேயும், உடற்பயிற்சி கூடங்கள், மற்போர் பயிற்சியகங்கள், நூலகங்கள் போன்ற இடங்களிலும் வைக்கப்பட்டன. [4] வணிகர்கள் மற்றும் பயணிகளின் காவல் தெய்வமாக ஆவதற்கு முன், எர்மெசு குழந்தைப் பேறு, நல்வாய்ப்பு, சாலைகள், எல்லைகளுடன் தொடர்புடைய தெய்வமாக கருதப்பட்டது. இதன் பெயர் ஹெர்மா என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இது கல், சுடுமண் அல்லது வெண்கலத்திலான சதுர அல்லது செவ்வக தூணைக் குறிக்கிறது; எர்மக்கள் தலையுடனான மார்பளவு உருவத்துடன், பொதுவாக தாடியுடன், [5] தூணின் உச்சியில் அமைந்திருக்கும். மேலும் ஆண் பிறப்புறுப்பு தூணின் அடிப்பகுதியை அலங்கரிக்கின்றன. இந்தத் தூண்களில் எர்மெசின் தலைகளுடன் மட்டும் அமைக்கப்படவில்லை. இதில் பிற கடவுள்கள் மற்றும் வீர நாயகர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் கூட, சிலவற்றில் இடம்பெற்றனர். ஏதென்சில், எர்மாய்கள் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் வணக்கத்திற்குரியைகளாக இருந்தன. இவை நற்பேறுக்காக வீடுகளுக்கு வெளியே தீமைவிலக்கிகளாக வைக்கப்பட்டன. [6] இவற்றை ஆலிவ் எண்ணெயால் தடவுவார்கள் அல்லது முழுக்காட்டுவார்கள். மேலும் மாலைகளால் அலங்கரிப்பதும் உண்டு. [7]

 
கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எர்மெசில் இருந்து எர்ம்சின் தொன்மையான தாடியுடன் கூடிய தலை

ரோமன் மற்றும் மறுமலர்ச்சி காலங்களில் ( டெர்மினி ), இதன் உடல் பெரும்பாலும் இடுப்புக்கு மேலே உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல நபர்கள், குறிப்பாக சாக்கிரட்டீசு மற்றும் பிளேட்டோ போன்ற எழுத்தாளர்களின் உருவங்களும் இந்த வடிவத்தில் பயன்படுத்தப்பட்டன. பண்டைய கிரேக்க எர்ம்களில் சாஃபோவின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மறுமலர்ச்சி காலத்திலிருந்து அநாமதேய பெண் உருவங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன, அப்போது எர்ம்கள் பெரும்பாலும் சுவர்களில் அலங்கார உறுப்புகளாக ஆக்கப்பட்டன.

ஆல்சிபியாடீஸ் சோதனை

தொகு

கிமு 415 இல், பெலோபொன்னேசியப் போரின்போது சிசிலியன் படையெடுப்பின் ஒரு பகுதியாக ஏதெனியன் கடற்படை சைராகுசுக்குச் செல்வதற்குச் சற்று முன்பு ஒரு இரவில், ஏதெனியன் எர்மன்கள் அனைத்தும் மூளியாக்கப்பட்டன. இத்தகைய இழிவான செயலானது, போர் வெற்றிக்கு அச்சுறுத்தலாக செய்யப்பதாக இருக்கும் என்று அப்போது பலர் கருதினர். [8]

இது ஒரு நாசகார செயல் என்று நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அந்த நேரத்தில் ஏதெனியர்கள் இது ஏதென்சில் இருந்த சிரக்கூசா அல்லது எசுபார்த்தன் அனுதாபிகளின் நாசகார வேலை என்று நம்பினர். [9] ஆல்சிபியாடிசின் எதிரிகள், ஏதெனியர்களின் இந்தக் கோபத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, இந்த இழிவுபடுத்தல்களையும், மற்ற புனிதமான பொருட்களை சிதைப்பது மற்றும் சமயச் சடங்குகளின் கேலி செய்வது உட்பட பிற துன்மார்க்கமான செயல்களை விசாரிக்கவேண்டும் என கோரினர். [10] அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணையை எதிர்கொள்ள முன்வந்தார். ஆனால் ஏதெனியர்கள் இந்த போர்ப் பயணத்தை இதற்காக தடுக்க விரும்பவில்லை. மேலும் அவர் இல்லாத நேரத்தில் அவர் தற்காத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட முடியாத நேரத்தில் அவருக்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்கு அவரது எதிர்ப்பாளர்கள் இதைப் பயன்படுத்தினர்.

அவர் போருக்காக சென்றவுடன், அவரது அரசியல் எதிரிகள் எர்மாவை சிதைத்தது மற்றும் எலியூசினியன் சமயச் சடங்குகளை அவதூறு செய்ததாகக் கூறப்படும் குற்றம் ஆகிய இரண்டு குற்றங்களுக்காவும் அவர் இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கலை மற்றும் பரவலர் பண்பாட்டில்

தொகு

லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஜீன். பால் கெட்டி அருங்காட்சியகத்தில் ரோமன் எர்மா எல்லைக் கற்களின் பெரிய சேகரிப்பு உள்ளது.

ஈசோப்பின் நீதிக்கதையில் எர்மன் சிலையை கேலி செய்யும் கதை உள்ளது. ஒரு பக்தியுள்ள நாய் அதற்கு 'அபிசேகம்' செய்ய முன்வந்ததால், கடவுள் அவசரமாக தன்னை வழிபடுபவர்கள் இதை செய்யத் தேவையில்லை என்று கூறுகிறார். [11]

ஹோப் மிர்லீஸின் கற்பனை புதினமான லுட்-இன்-தி- மிஸ்டில் முக்கிய கதாபாத்திரம் " பெர்ம் " மற்றும் "எர்ம்" எனப்படும் ஒரு பொருளின் அடியில் தோண்டி ஒரு முக்கியமான பொருளைக் கண்டறிவதாக உள்ளது. [12]

காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Anatole Bailly, Abrégé du dictionnaire Grec-Français, Hachette, Paris, 1901, p. 361.
  2. Nicand. Ther. 150; Theophrast. Char. 16.
  3. Paus. vii. 22. § 2; Aristoph. Plut. 1121, 1144; Hom. Od. xiv. 435, xix. 397; Athen. i. p. 16.
  4. Brunck, Anal. 3.197, no. 234
  5. The image of a youthful, beardless Hermes was a development of the 5th century BCE.
  6. Thuc. 6.27; Aelian, Ael. VH 2.41; Suid. s.v. Pollux, 8.72; Athen. 10.437b
  7. Theophrast. Char. 16; comp. Genesis 28.18, 22, 31.45-48
  8. Thuc. 6.27, with Grote's remarks, ch. 58, 5.146ff.; Andoc. de Myst.; Aristoph. Lys. 1094
  9. Introduction "A History of My Times" (Penguin Classics) Paperback – May 31, 1979 by the editor George Cawkwell. Translated from Xenophons' "Hellenica" by Rex Warner
  10. Thucydides (2008). The Landmark Thucydides. New York: Free Press, sections 6.27–28.
  11. "Hermes and the Dog". mythfolklore.net.
  12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4405-4338-8 p. 220
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்ம்_(சிற்பம்)&oldid=3679442" இலிருந்து மீள்விக்கப்பட்டது