சிசிலியன் படையெடுப்பு

பெலோபொன்னேசியப் போரின் போது (கிமு 415-413) சிசிலிக்கு ஏதெனியன் படையெடுப்பு

சிசிலியன் படையெடுப்பு (Sicilian Expedition) என்பது சிசிலி மீதான ஏதெனியன் படையெடுப்பு ஆகும். இது கிமு 415-413 காலக்கட்டத்தில் ஏதென்சுக்கும் எதிர்தரப்பினரான எசுபார்த்தா, சிராக்கூசா, கொரிந்து ஆகியோருக்கு இடையே நடந்த பெலோபொன்னேசியன் போரின் போது நடந்தது. ஏதென்சுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய இந்த படையெடுப்பு ஏதெனியப் படைகளுக்கு பேரழிவு தந்த தோல்வியாக ஆனது.

சிசிலியன் படையெடுப்பு
பெலோபொன்னேசியன் போர் பகுதி

சிராகூசில் ஏதெனியன் இராணுவத்தின் அழிவு
நாள் கிமு 415–413
இடம் சிசிலி, இத்தாலி
தீர்க்கமான எசுபார்த்தன்/சிராகுசன் வெற்றி
 • ஏதெனியன் படை முற்றிலும் அழிக்கப்பட்டது
பிரிவினர்
ஏதென்சு

கூட்டாளிகள்: டெலியன் கூட்டணி
செகெஸ்டா

எசுபார்த்தா

கூட்டாளிகள்: பெலோபொன்னேசியன் கூட்டணி
கொரிந்து
சிரக்கூசா

தளபதிகள், தலைவர்கள்
Nicias (கைதிமரணதண்டணை,
Lamachus ,
Demosthenes (கைதிமரணதண்டணை,
Eurymedon 
Gylippus,
Hermocrates
பலம்
துவக்கத்தில்:
 • 5,100 ஹாப்லைட்கள் (கனரக காலாட்படை)[1]
 • 480 வில்லாளர்கள்[1]
 • 700 கவண்காரர்கள்[1]
 • 120 பிற இலகுரக காலாட்படை[1]
 • 30 குதிரைப்படை[1]
 • 134 கப்பல்கள்[1]

கிமு 414 துணைப்படைகள்:

 • 250 ஏதெனியன் குதிரைப்படை
 • 30 ஏற்ற வில்லாளர்கள்
 • 400 சிசிலியன் கூலிப்படை குதிரைப்படை

கிமு 413 துணைப்படைகள்:

 • 5,000 ஹாப்லைட்கள்[2]
 • அதிக எண்ணிக்கையிலான இலகுரக துருப்புக்கள்[2]
 • 73 கப்பல்கள்[2]
துவக்கத்தில்:
 • 5,000–6,000 ஹாப்லைட்கள்[3]
 • 1,200 குதிரைப்படை[4]
 • குறைந்தது 100 கப்பல்கள்

ஜிலிப்பசின் எசுபார்த்தன் படை:

 • 700 ஆயுதம் ஏந்திய மாலுமிகள்[5]
 • 1,000 ஹாப்லைட்கள்[5]
 • 1,000 சைல் போர்வீரர்கள்[5]
 • 100 குதிரைப்படை[5]

கிமு413 கிரேக்கத்திலிருந்து நிவாரணப் படை:

 • 2,000 ஹாப்லைட்கள்[6]

கிமு 413 Sicilian relief force:

 • 2,300 வீரர்கள்[7]
இழப்புகள்
படையினர் அனைவரும் கொல்லப்பட்டனர், பிடிபட்டனர் அல்லது அடிமைகளாக விற்கப்பட்டனர். தெரியவில்லை

படையெடுப்பானது அதன் நோக்கம் மற்றும் வழிநடத்தும் அமைப்பில் இருந்த நிச்சயமற்ற தன்மையால் துவக்கத்தில் இருந்தே தடையை எதிர்கொண்டது. மேலும் போரின் முதன்மை திட்டமிடுபவரான தளபதி ஆல்சிபியாடீசு மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கானயை எதிர்கொள்ள ஏதென்சுக்கு வருமாறு அழைக்கப்பட்டார். அச்சமயம் கடற்படை சிசிலியை அடைந்திருக்கவில்லை. அவரும் மறுப்புக் கூறாமல் புறப்பட்டார். இருப்பினும், போர் நடவடிக்கையில் ஏதெனியர்கள் துவக்க நிலையில் நிக்கியாஸ் தலைமையில் வெற்றிகளை ஈட்டினர். சிசிலியின் மிகவும் சக்திவாய்ந்த அரசான சிரக்கூசா, ஏதெனியன் படைகளை சற்று தாமதித்தே எதிர் தாக்குதல் நடத்தியது. என்றாலும் ஏதெனியப் படைகளை சிரக்கூசா துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வெற்றியை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிக்கியாஸ் குளிர்காலம் வந்துவிட்டதென்று சொல்லி தன் கடற்படையை கட்டனேவுக்கு திரும்பிச் சென்றுவிட்டார். குளிர்காலத்தில் ஏதெனியரும் சிரகூசர்களும் தங்கள் தரப்புக்கு வலிமை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி சிரகூசர்கள் கொரிந்தியாவுக்கும், எசுபார்த்தாவுக்கும் உதவிக்காக தூதர்களை அனுப்பினர். அதனால் எசுபார்த்தன் தளபதி ஜிலிப்பஸ் தலைமையில் ஒரு எசுபார்த்தன் படையை சிரகூசுக்கு அனுப்பினர். கொரிந்தியாவும் ஒரு கடற்படையை அனுப்பியது. கிமு 414 ஆம் ஆண்டு நிக்கியாஸ் தலைமையிலான ஏதெனியக் கடற்படை சிரகூசை முற்றுகையிடத் தொடங்கியது. சிரகூசர்கள் இதை எதிர்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். முற்றுகையின்போது ஏதெனியர்கள் வெற்றியை ஈட்டும் நிலையில் இருந்தனர். அச்சமயம் ஜிலிபஸ் தலைமையிலான எசுபார்த்தன் படையும், கொரிந்தியன் கடற்படையும் வந்து சேர்ந்தன. ஏதெனியர்கள் சிராகூசை சுற்றி நல்ல முறையில் முற்றுகைக்கான பாதுகாப்பை செய்திருந்தாலும், வடக்குப் பக்கத்தில் சற்று அஜாக்கிரதையைக இருந்துவிட்டார். அந்த வழியாக ஜிலிப்பஸ் தலைமையிலான எசுபார்த்தன் படைகள் நகரத்துக்கு வந்து சேர்ந்து நகரத்தின் அரணை வலுவாக்கின. இதனால் ஏதெனியர்கள் மேலும் படை உதவிகோரி ஏதென்சுக்கு தகவல் அனுப்பினர். இந்நிலையில் ஏதெனியர்களின் பாதுகாப்புத் தலங்கள் மீது தாக்குதலை நடத்திய எசுபார்த்தன்கள் தானியங்கள், போர்த்தளவாடங்கள் போன்றவற்றை தங்கள் வசப்படுத்தினர். ஏதெனியர்களின் உதவிப் படைகள் வந்து சேர்ந்த நிலையில் ஏதெனியர்கள் சிரக்கூவின் முக்கியப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு பேரழிவுதந்த தோல்வியைப் பெற்றனர். அது ஏதெனியன் வீரர்கள் சண்டையைத் தொடரும் திறனையும் அவர்களின் மன உறுதியையும் சேதப்படுத்தியது. அதனால் இறுதியில் ஏதெனியர்கள் சிராகூசிலிருந்து பின்வாங்கி வெளியேற்ற முயன்றனர். ஆனால் ஏதெனியர்களை வெளியேற விடாமல் ஜிப்பஸ் தன் படைகளைக் கொண்டு தடுத்து நிறுத்தினார். இந்த குறுக்குத் தடையை மீறிச் செல்லவேண்டி இருதரப்பினருக்கும் இரண்டு தடவை கடற்போர் நிகழ்ந்தது. இரண்டிலும் ஏதெனியர்கள் தோல்வியுற்றனர். யூரிமெடோன் கொல்லப்பட்டார். பின்னர் ஏதெனியர்கள் தரைவழியாக பின்வாங்கிச் செல்ல முயன்றனர். ஆனால் வழியில் சிரக்கூசார்களால் சுற்றி வளைக்கபட்டனர். தப்பிச் சென்ற ஏதெனியர்கள் போக சுமார் ஏழாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தட்ப வெட்பத்தாலும், போதிய உணவு இல்லாததாலும் இறந்தனர் எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

தோல்வியின் விளைவுகள் மோசமாக இருந்தன. இத் தோல்வியில் ஏதென்சின் இருநூறு கப்பல்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள் என ஏதென்சின் மொத்த மனிதவளத்தில் கணிசமான பகுதியை, ஒரேடியாக இழந்தது. இதன் விளைவாக முதன்மை நிலப்பகுதியிலும் நகரத்திலும் எதிரிகளான பாரசீகர்கள் தாக்குதல் நடத்த ஊக்கம் பெற்றனர். மேலும் ஏஜியனில் கிளர்ச்சிகள் வெடித்தன. சில வரலாற்றாசிரியர்கள் இந்த தோல்வியை பெலொபெனியன் போரின் திருப்புமுனையாக கருதுகின்றனர். இருப்பினும் ஏதென்சு அடுத்து வந்த ஒரு தசாப்தத்திலும் தொடர்ந்து போராடியது. தோல்விக்குப் பிறகு ஏதென்ஸ் பல காலம் போராடியது குறித்து தற்கால கிரேக்கர்கள் ஆச்சரியப்படுகின்றனர். போரினால் ஏற்பட்ட இழப்புகள் பேரழிவை ஏற்படுத்தியதாக துசிடிடீஸ் கவனித்தார். ஏதென்சு போரின் தோல்வியில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் மீண்டு வர முடிந்தது என்றாலும். அதில் முக்கியப் பிரச்சினை கப்பல்களை இழந்ததை விட சிறந்த போர்வீரர்களையும், திறமையான மாலுமிகளையும் இழந்தது ஈடு செய்ய முடியாததாக ஆனது.

குறிப்புகள்

தொகு
 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Thucydides, The Peloponnesian War, 6.43
 2. 2.0 2.1 2.2 Thucydides History of the Peloponnesian War, Book 7
 3. Philip Matyszak, Expedition to Disaster, p. 70.
 4. Philip Matyszak, Expedition to Disaster, p. 73.
 5. 5.0 5.1 5.2 5.3 Philip Matyszak, Expedition to Disaster, p. 96.
 6. Philip Matyszak, Expedition to Disaster, p. 111.
 7. Philip Matyszak, Expedition to Disaster, p. 116.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிலியன்_படையெடுப்பு&oldid=3518021" இலிருந்து மீள்விக்கப்பட்டது