கொரிந்து

கிரேக்க நகரம்

கொரிந்து (Corinth, KORR-inth ; கிரேக்கம்: Κόρινθος‎ ) என்பது ஒரு பண்டைய நகரத்தின் தொடர்ச்சி ஆகும். இது தென் நடு கிரேக்கத்தில் அமைந்துள்ள பெலோபொன்னீஸ், கொரிந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் நகராட்சி ஆகும். 2011 இல் நடந்த உள்ளாட்சி சீர்திருத்தத்திலிருந்து, இது கொரிந்து நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது நகராட்சியின் தலைமையகமாகவும், நகராட்சியின் ஒரு அலகாகவும் உள்ளது.[2] மேலும் இது கொரிந்தியா பிராந்தியத்தின் தலைநகராகவும் உள்ளது.

கொரிந்து
Κόρινθος
நகரத்தின் தோற்றம்
நகரத்தின் தோற்றம்
அமைவிடம்

No coordinates given

Location within the regional unit
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: பெலோபொன்னீஸ்
மண்டல அலகு: கொரிந்தியா
நகராட்சி: Corinth
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 38,132
 - பரப்பளவு: 102.19 km2 (39 sq mi)
 - அடர்த்தி: 373 /km2 (966 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (min-max): 0–10 m ­(0–33 ft)
அஞ்சல் குறியீடு: 20100
தொலைபேசி: (+30) 27410
வாகன உரிமப் பட்டை: KP
வலைத்தளம்
www.korinthos.gr

1858 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொரிந்தின் குடியிருப்புகள் அழித்த பிறகு, இது Nea Korinthos ( Νέα Κόρινθος ) அல்லது புதிய கொரிந்து என நிறுவப்பட்டது. இது பண்டைய கொரிந்துவின் தளத்திலும் அதைச் சுற்றியும் வளர்ந்தது.

நிலவியல் தொகு

 
அக்ரோகோரிந்த் கோட்டையிலிருந்து கொரிந்து வளைகுடா மற்றும் நவீன கொரிந்துவின் காட்சி

ஏதென்சுக்கு மேற்கே, சுமார் 78 கிலோமீட்டர்கள் (48 mi) தொலைவில் அமைந்துள்ள கொரிந்து கடற்கரை நகரங்களான (வலஞ்சுழியில்) லெச்சாய்யோ, இஸ்த்மியா, கெக்ரிஸ் மற்றும் நிலம் சூழ் உள் நாட்டு நகரமான எக்ஸாமிலியாவின் போன்ற நகரங்கள் பண்டைய கொரிந்தின் தொல்லியல் தளம் மற்றும் கிராமத்தை சூழந்துள்ளன. நகரத்தைச் சுற்றியுள்ள இயற்கை அம்சங்களாக வோச்சாவின் குறுகிய கடற்கரை சமவெளி, கொரிந்தியன் வளைகுடா, அதன் கால்வாயால் வெட்டப்பட்ட கொரிந்தின் பூசந்தி, சரோனிக் வளைகுடா, ஒனியா மலைகள், இடைக்கால அக்ரோபோலிஸ் கட்டப்பட்ட அக்ரோகோரிந்தின் ஒற்றைக்கல் பாறை ஆகியவை உள்ளன.

வரலாறு தொகு

கொரிந்து என்ற பெயரானது பழங்கால நகர அரசான பண்டைய கொரிந்திலிருந்து வந்தது. இந்த இடத்தில் கிமு 3000க்கு முன்பிருந்தே மக்கள் வசித்து வந்தனர். இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் கிமு 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகின்றன, கொரிந்து ஒரு வணிக மையமாக வளரத் தொடங்கியது. கிமு 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், பச்சியாட் குடும்பம் கொரிந்துவை ஆட்சி செய்தது. சிப்செலஸ் பச்சியாட் குடும்பத்தை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்தார். கிமு 657 மற்றும் 550 க்கு இடையில், அவரும் அவரின் மகன் பெரியாண்டரும் கொரிந்துவை ஆட்சி செய்தனர்.

கிமு 550 இல், சிலவர் ஆட்சிக்குழு அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த அரசாங்கம் பெலோபொன்னேசியன் கூட்டணிக்குள் எசுபார்த்தாவுடன் கூட்டணி வைத்தது. மேலும் கொரிந்து பாரசீகப் போர்களிலும் பெலோபொன்னேசியப் போரிலும் எசுபார்த்தாவின் கூட்டாளியாகக் கலந்துகொண்டது. பெலோபொன்னேசியப் போரில் எசுபார்த்தாவின் வெற்றிக்குப் பிறகு, இரு நாடுகளும் தங்கள் கூட்டணியை முறித்துக் கொண்டன. மேலும் கொரிந்து கிமு 4 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த பல்வேறு போர்களில் ஒரு தனித்த கொள்கையைப் பின்பற்றியது. கிரேக்கத்தை மாசிடோனியன் கைப்பற்றிய பிறகு, அக்ரோகோரிந்த் கிமு 243 வரை மாசிடோனிய அரண்காவல் செய்யப் படையின் இடமாக இருந்தது. பின்னர் நகரம் விடுவிக்கப்பட்டு அச்சேயன் கூட்டண்ணியில் சேர்ந்தது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, கிமு 146 இல், கொரிந்து ரோமானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது.

 
கிமு 146 இல் கொரிந்தின் ரோமன் சாக் (தாமஸ் அல்லோம், 1870)

கிமு 44 இல் புதிதாக மீண்டும் கட்டப்பட்ட ரோமானிய குடியேற்றமாக, கொரிந்து செழித்து, ரோமானிய மாகாணமான அச்சேயாவின் நிர்வாக தலைநகராகவும் மாறியது.[3]

1858 ஆம் ஆண்டில், நவீன நகரத்திலிருந்து தென்மேற்கே மூன்று கிலோமீட்டர் (இரண்டு மைல்) தொலைவில் அமைந்துள்ள பண்டைய கொரிந்து (Αρχαία Κόρινθος, ஆர்க்கேயா கொரிந்தோஸ்) என்று அழைக்கப்படும் பழைய நகரம் 6.5 அளவு நிலநடுக்கத்தால் முற்றிலும் அழிந்தது. புதிய கொரிந்து ( Nea Korinthos ) அதன் வடகிழக்கில், கொரிந்து வளைகுடாவின் கடற்கரையில் கட்டப்பட்டது. 1928 ஆம் ஆண்டில், 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதிய நகரத்தை அழித்தது, பின்னர் அது அதே இடத்தில் மீண்டும் நகரம் கட்டப்பட்டது.[4] 1933 இல், ஒரு பெரிய தீ ஏற்பட்டது, அதன்பிறகு புதிய நகரம் மீண்டும் கட்டப்பட்டது.

மக்கள்தொகையியல் தொகு

கொரிந்து மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
ஆண்டும.தொ.±%
199128,071—    
200130,434+8.4%
201130,176−0.8%
[5]

கொரிந்து நகராட்சியானது (Δήμος Κορινθίων) 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 58,192 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இது கலமாட்டாவிற்கு அடுத்து பெலோபொனீஸ் பிராந்தியத்தில் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும். கொரிந்தின் நகராட்சி அலகு 38,132 மக்களைக் கொண்டிருந்தது, அதில் கொரிந்திலேயே 30,176 மக்கள் வசிக்கின்றனர். இது பெலோபொன்னீஸ் பிராந்தியத்தின் நகரங்களில் கலமாட்டா மற்றும் திரிபோலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

 
1882 இல் கொரிந்து

கொரிந்தின் நகராட்சி அலகானது யூனிட் (Δημοτική ενότητα Κορινθίων) கொரிந்து நகரத்தைத் தவிர அர்ச்சயா கொரிந்து (2011 இல் 2,198 மக்கள்), எக்ஸாமிலியா நகரம் (2,905 மக்கள்), மற்றும் சைலோகெரிசா (1,316 மக்கள்) மற்றும் சோலமோஸ் (817 மக்கள்) ஆகிய சிறிய குடியிருப்புகளை உள்ளடக்கியது. நகராட்சி அலகு 102.187 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.[6]

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
  3. "Corinth | Greece | Britannica".
  4. Tsapanos, Theodoros M. (March 2011). "Deterministic seismic hazard analysis for the city of Corinth, central Greece". Journal of the Balkan Geophysical Society 14 (1): 1–14. http://www.balkangeophysoc.gr/online-journal/2011_V14/No1_March2011/JBGS_Vol_14_No1_March_2011_p00-14_Tsapanos_et_al.pdf. பார்த்த நாள்: 21 July 2015. 
  5. "EL STAT" (PDF).
  6. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 21 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிந்து&oldid=3708840" இலிருந்து மீள்விக்கப்பட்டது