கொரிந்து வளைகுடா
கொரிந்து வளைகுடா அல்லது கொரிந்திய வளைகுடா (Gulf of Corinth அல்லது the Corinthian Gulf கிரேக்கம்: Κορινθιακός Kόλπος , Korinthiakόs Kόlpos, Greek pronunciation: [korinθʝaˈkos ˈkolpos] ) என்பது அயோனியன் கடலின் ஆழமான நீர் உள்வாய் ஆகும். இது பெலோபொன்னீசியாவை மேற்கு கிரேக்கத்திலிருந்து பிரிக்கிறது. இது கிழக்கில் கொரிந்தின் பூசந்தியால் சூழப்பட்டுள்ளது, இதில் கொரிந்து கால்வாயும் அடங்கும். மேலும் இதன் மேற்கில் ரியான் ஜலசந்தியால் இது குறுகிய பட்ராஸ் வளைகுடாவாக ( அயோனியன் கடலின் ஒரு பகுதி) விரிவடைகிறது. ரியோ-ஆண்டிரியோ பாலம் 2004 முதல் இதன் குறுகிய பகுதியைக் கடக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வளைகுடாவானது பெரிய நிர்வாகப் பிரிவுகளை (பிராந்திய அலகுகள்) எல்லையாக கொண்டு உள்ளது: வடக்கில் ஏட்டோலியா-அகார்னானியா, போசிஸ், வடகிழக்கில் போயோட்டியா, கிழக்கில் அட்டிகா, தென்கிழக்கு மற்றும் தெற்கில் கொரிந்தியா, தென்மேற்கில் அக்கேயா ஆகிய பிராந்தியங்கள் உள்ளன.
கொரிந்து வளைகுடா | |
---|---|
கொரிந்திய வளைகுடா | |
ஆள்கூறுகள் | 38°12′N 22°30′E / 38.200°N 22.500°E |
வகை | வளைகுடா |
பூர்வீக பெயர் | Κορινθιακός Kόλπος (கிரேக்கம்) |
Part of | அயோனியன் கடல் (நடுநிலக் கடல்) |
வடிநில நாடுகள் | கிரேக்கம் |
அதிகபட்ச நீளம் | 130 km (81 mi)[1] |
அதிகபட்ச அகலம் | 32 km (20 mi) |
குறைந்தபட்ச அகலம் | 8.4 km (5.2 mi) |
மேற்பரப்பளவு | 2,400 km2 (930 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 935 m (3,068 அடி) |
இடைக்காலத்தில், இந்த வளைகுடாவானது லெபாண்டோ வளைகுடா ( நவ்ப்பக்டசின் இத்தாலிய வடிவம்) என்று அறியப்பட்டது.
கிரேக்க வணிகத் துறைமுகமான பேரேயஸ் மேற்கு மத்தியதரைக் கடல் மற்றும் எர்மிசர் துறைமுகங்களுக்கு இடையேயான கப்பல் பாதைகள் இந்த வளைகுடாவில் செல்கின்றன.[2]
புவியியல்
தொகுஅனடோலியன் புவித் தட்டு மேற்கு நோக்கி நகர்வதால் டெக்டோனிக் பிளவு விரிவடைவதால் வளைகுடா உருவானது, மேலும் ஆண்டுக்கு 10 mm (0.39 அங்) ஆக விரிவடைகிறது.[3] சுற்றியுள்ள உரசு முனைகளால் 6.5 ரிக்டர் அளவு வரை நிலநடுக்கம் உருவாக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அவை ஒப்பீட்டளவில் அரிதாகவே நிகழக்கூடியவை. 1995 சூன் 15, 1995 அன்று ஏஜியோன் நகருக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[4]
இயற்கை
தொகுதுடுப்பு திமிங்கலங்கள் [5] அல்லது ஓங்கில்கள் போன்ற கடற்பாலூட்டிகள் எப்போதாவது கொரிந்தியன் வளைகுடாவிற்குள் நுழைவதாக அறியப்படுகிறது.[6]
வளைகுடாக்கள் மற்றும் விரிகுடாக்கள்
தொகு- அல்கியோனைட்ஸ் வளைகுடா, கிழக்கு
- கிறிஸ்ஸேயன் வளைகுடா ( கிரிஸ்ஸா வளைகுடா), வடக்கு
- ஆன்டிகிரா விரிகுடா, வடக்கு
- டோம்ப்ரைனா (டோம்வ்ரெனா), வடக்கு
- ரியான் ஜலசந்தி, மேற்கு
தீவுகள்
தொகு- டிரிசோனியா (மக்கள் வசிக்கும் ஒரே தீவு), அல்கியோனைட்ஸ் தீவுகள் (தீவுக் கூட்டம்), ஆம்பெலோஸ் (தீவு), ஃபோனியாஸ் (தீவு), பிரசௌதி (தீவு)
பாலங்கள்
தொகு- ரியோ-ஆண்டிரியோ பாலம்
நகரங்கள் மற்றும் ஊர்கள்
தொகுவளைகுடாவிற்கு அடுத்ததாக அமைந்துள்ள முக்கிய ஊர்கள் மற்றும் நகரங்கள், வடமேற்கில் இருந்து கடிகார திசையில் இருந்து, பிராந்திய அலகு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது:
- ஏட்டோலியா-அகார்னானியா : ஆன்டிரியோ, நவ்ப்பாக்ட்டஸ்
- ஃபோசிஸ் : கேலக்ஸிடி, இடியா, கிர்ரா
- போயோட்டியா : ஆன்டிகிரா, பராலியா டிஸ்டோமோ
- மேற்கு அட்டிகா
- கொரிந்தியா : லூட்ராகி, கொரிந்த், அசோஸ், வ்ரச்சதி, வேலோ, கியாடோ, கேடோ டிமினியோ , சைலோகாஸ்ட்ரோ
- அக்கீயா : ஐகீரா, டியாகோப்டோ, ஏஜியோ, ரோடோடாஃப்னி, அஜியோஸ் வாசிலியோஸ், அக்தையோ
கலக்கும் ஆறுகள்
தொகுஅனைத்து துணை ஆறுகளும் மேற்கிலிருந்து கிழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
வடக்கு
தொகு- மோர்னோஸ்
- பிலிசுடோசின்
தெற்கு
தொகு- செலெம்னோஸ்
- வோலினாயோஸ்
- ஃபோனிகாஸ்
- செலினௌண்டாஸ்
- வௌரைகோஸ்
- கிராதிஸ்
- கிரியோஸ்
- சகோலிட்டிகோஸ்
- ஃபோனிசா
- சித்தாஸ்
- எலிசோனாஸ்
- அசோபோஸ்
குறிப்புகள்
தொகு- ↑ Thalassographica, Institute of Oceanographic and Fisheries Research, vol. 11-15, page 35, (1988)
- ↑ "Greece's first electric ferry announced". Plugboats. 19 December 2019.
- ↑ Ambraseys, N.N. & Jackson, J.A. 1997. Seismicity and strain in the Gulf of Corinth (Greece) since 1694. Journal of earthquake engineering, 1, 433-474.
- ↑ Frostick, L & Steel, Ronald. (2009). Tectonic Signatures in Sedimentary Basin Fills: An Overview. International Journal of Rock Mechanics and Mining Sciences & Geomechanics Abstracts. 31. 1-9.10.1002/9781444304053.ch1
- ↑ nefarius03 (19 May 2013). "Fin Whale in the Gulf of Korinth". Archived from the original on 19 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 13 April 2018 – via YouTube.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unfit URL (link) - ↑ Keep Talking Greece. 2011. Trapped Whale in Greece (video) பரணிடப்பட்டது 2017-11-22 at the வந்தவழி இயந்திரம். Retrieved on November 6. 2014