எர்ரா மாட்டி திபாலு
எர்ரா மாட்டி திபாலு (Erra Matti Dibbalu) என்றும் செம்மணல் மலை என்றும் அழைக்கப்படுவது தேசிய புவி-பாரம்பரிய நினைவுச்சின்னம் ஆகும்.[1][2][3] இது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள பல பாரம்பரிய தளங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]
எர்ரா மாட்டி திபாலு | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம், இந்தியா |
பற்றி
தொகுஇந்த எர்ரா மாட்டி திபாலு என்பதுவிசாகப்பட்டினத்தின் இயற்கை சொத்து ஆகும். இது 12000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இடமாகும். சுமார் 40 அடி உயரச் சிவப்பு மணல் மேடுகள் பல காணப்படுகின்றன.[5] இந்த தளங்களைப் புவி-பாரம்பரிய தள நிலையை அடைய இந்திய புவியியல் ஆய்வு மையம் உதவியது.[6] 2014ஆம் ஆண்டு தேசிய புவி பாரம்பரிய இடமாகவும் 2016ஆம் ஆண்டு மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இப்பகுதி ஆனது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Geological Monument, from Geological Survey of India website". Archived from the original on 12 July 2017. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.
- ↑ Geo-Heritage Sites, Minister of Mines Press release, 09-March-2016
- ↑ national geo-heritage of India பரணிடப்பட்டது 2017-01-11 at the வந்தவழி இயந்திரம், INTACH
- ↑ "about erra matti dibbalu". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
- ↑ https://www.thehindu.com/life-and-style/travel/visakhapatnams-hidden-ecological-hotspots/article29519572.ece
- ↑ "status". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.