எர்வின், கலிபோர்னியா
எர்வின் (Irvine CA) அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில், ஆரஞ்ச் வட்டத்தில் உள்ளது. இர்வின் குழுமத்தின் முயற்சியில் 1960 இல் திட்டமிட்டு 1971 திசம்பர் 28 இல் எர்வின் நகரம் அமைக்கப்பட்டது. இதன் பரப்பளவு 66 சதுர மைல்கள் ஆகும். மக்கள் தொகை தோராயமாக 260000 ஆகும்.[1]
எல்லைகள்தொகு
எர்வின் நகரத்தின் வடக்கில் டஸ்டின், வடமேற்கில் சாந்தா அனா, கிழக்கில் லேக் பாரெஸ்ட், தென் கிழக்கில் லகுனா குன்றுகள், மேற்கில் கோஸ்டா மேசா, தென் மேற்கில் நியூபோர்ட் பீச் அமைந்துள்ளன. சாண்டியாகோ கிரீக் ஓடை எர்வின் நகரில் ஓடுகிறது.
கல்வி நிலையங்கள்தொகு
கலிபோர்னியா பல்கலைக்கழகம்,எர்வின், கான்கார்டியா பல்கலைக்கழகம், ஆரஞ்ச் கவுன்டி சென்டர் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெப்பர்டைன் பல்கலைக் கழகம், வெப்ஸ்டர் பல்கலைக்கழகம் ஸ்டான்பிரிஜ் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் எர்வினில் உள்ளன. [2] தகவல் நுட்ப நிறுவனங்கள், மென்பொருள் குழுமங்கள், பல தொழில் அமைப்புகளின் தலைமை அலுவலங்கள் முதலியன இங்கு உள்ளன.
சிறப்புகள்தொகு
சிஎன்என் மணீ டாட் காம் 2008இல் அமெரிக்காவின் நாலாவது சிறந்த இடம் எர்வின் ஆகும் என மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் பாதுகாப்பான நகரமாக விளங்குகிறது. வால் ஸ்ட்ரிட் இதழ் மிகவும் சிறப்பான நகரம் எர்வின் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் உலகக் கிராமத் திருவிழா என்ற பெயரில் எர்வின் நகரத்தில் பல்வேறு இன மக்களும் ஒன்று கூடி கண்காட்சிகளைக் கண்ணுற்றும், வகை வகையான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டும் மகிழ்கிறார்கள். [3] உள்ளூரில் பேருந்துகள் பயணத்திற்காகப் பல வழித்தடங்களில் உள்ளன. மிதிவண்டிகளில் மக்கள் செல்வதற்கு வசதியாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எர்வினில் 300 ஏக்கர் பரப்பளவில் சான்டியோகா கிரிக்கில் சான் ஜோகுவின் வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது.[4]
சான்றாவணம்தொகு
- ↑ https://www.mapquest.com/us/ca/irvine-282039616
- ↑ http://www.cityofirvine.org/about-irvine/education
- ↑ http://legacy.cityofirvine.org/globalvillage/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-26 அன்று பார்க்கப்பட்டது.