எலன் கிளெமன்

சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமாவார்

எலன் எம்மா அகஸ்டா கிளெமன் ( Ellen Emma Augusta Kleman ) (1867-1943) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1907 முதல், பெண்கள் இயக்கத்திற்கு ஆதரவான டாக்னி என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். 1914 இல் ஹெர்தா என்ற இதழில் சேர்ந்து 1932 வரை பணியாற்றினார்.[1] [2]

எலன் கிளெமன்

சுயசரிதை

தொகு

1867 இல் கார்ல்ஸ்க்ரோனா என்ற ஊரில் இராணுவத் தளபதி கார்ல் கிளெமன் (1820-1872) மற்றும் ஜோகன்னா அகஸ்டா கிராம் (1825-1904) ஆகியோருக்கு எலன் எம்மா அகஸ்டா கிளெமன் என்ற பெயரில் மகளாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரி, அன்னா கிளெமனும் (1862-1940), பெண்கள் இயக்கத்தில் தீவிரமாக இருந்தார். [3] கார்ல்ஸ்க்ரோனாவில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்த பிறகு, உப்சாலா மற்றும் ஸ்டாக்ஹோமில் உள்ள வங்கிகளில் பணிபுரிந்தார். [1] பெண்கள் உரிமைகளுக்கு தீவிர ஆதரவாளராக இருந்த இவர் 1907 இல், பெண்கள் இயக்கத்தின் முக்கிய அங்கமான டாக்னி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானார். பெண்களின் மாநாடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க பெண்களின் வாழ்க்கை வரலாறுகள் உட்பட பல கட்டுரைகளை இவர் தானே எழுதினார். 1913 இல் டாக்னி தனது வெளியீட்டை நிறுத்திய பின்னர், ஹெர்தா என்ற இதழில் ஆசிரியராக சேர்ந்து 1914 முதல் 1932 வரை பணியாற்றினார். 1922 முதல் 1931 வரை ஸ்டாக்ஹோம் அத்தியாயத்தின் தலைவராக இருந்த சுவீடன் பெண்கள் உரிமை அமைப்பான பிரெட்ரிகா பிரேமர் என்ற சங்கத்தில் பணியாற்றினார் [1]

இலக்கியப் பணிகள்

தொகு

சங்கத்தின் நிறுவனர் பிரெட்ரிகா பிரெமர் (1801-1865) மீது இவர் அதிக ஆர்வம் காட்டினார். அவரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார். 1912 முதல் தான் இறக்கும் வரை அவரது தோழி கிளாரா ஜோகன்சனுடன் சேர்ந்து, பிரேமரின் கடிதங்களின் நான்கு பெரிய தொகுதிகளை வெளியிட்டார். [2]

பெண்கள் இயக்கம் பற்றிய இவரது எழுத்துக்களுக்கு மேலதிகமாக, கிளெமன் சுய வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாமல் மற்றவர்களால் கையாளப்பட்டு வழிநடத்தப்பட்ட பெண்களைப் பற்றி பேபியன் வென்ட்ஸ் ஹஸ்த்ரு (பேபியன் வென்ட்ஸின் மனைவி) என்ற வரலாற்றுப் புதினத்தை வெளியிட்டார். [2]

விருதுகள்

தொகு

1942 ஆம் ஆண்டில், கிளெமன் சுவீடன் மக்களுக்கான மிக உயர்ந்த விருதான இல்லீஸ் கோரம் பதக்கத்துடன் கௌரவிக்கப்பட்டார். [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Ellen Kleman" (in Swedish). Göteborgs Universitetsbibliotek. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 Toijer-Nilsson, Ying. "Ellen E A Kleman" (in Swedish). Riksarkivet: Svenskt biografiskt lexikon. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Anna Kleman" (in Swedish). Göteborgs universitetsbibliotek. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_கிளெமன்&oldid=3658462" இலிருந்து மீள்விக்கப்பட்டது