அன்னா கிளெமன்

சுவீடனைச் சேர்ந்த காப்பீட்டு அதிகாரியும் பெண்ணியவாதியுமாவார்

அன்னா சோபியா கிளெமன் ( Anna Sofia Kleman ) (1862-1940) ஒரு சுவீடனைச் சேர்ந்த காப்பீட்டு அதிகாரியும் பெண்ணியவாதியுமாவார். பெண்களின் உரிமைகள் ஆர்வலராகவும், அமைதிவாதியாகவும், குறிப்பாக வாக்களிக்கும் உரிமைகள் தொடர்பாக இவர் செய்த பணிக்காக நினைவுகூரப்படுகிறார். 1911-ஸ்டாக்ஹோமில் நடந்த பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் பங்கேற்றார். 1915 ஆம் ஆண்டு டென் ஹாக்கில் நடந்த சர்வதேச பெண்கள் அமைதி மாநாட்டில் சுவீடனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]

1915 இல் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அன்னா கிளமென்

1919 இல் "சேவ் தி சில்ட்ரன்" என்ற தொண்டு உருவாக்கப்பட்டது போது இவர் சுவீடன் பிரதிநிதி ராடா பார்னெனின் குழுவில் இருந்தார். இறுதியில் இவர் குழுவின் தலைவராவார்.[2]

சுயசரிதை

தொகு
 
1915 இல் நடந்த சர்வதேச மகளிர் மாநாடு. இடமிருந்து வலமாக:1. லூசி தூமையன் - ஆர்மீனியா, 2. லியோபோல்டின் குல்கா, 3. லாரா ஹியூஸ் - கனடா, 4. ரோசிகா ஸ்விம்மர் - அங்கேரி, 5. அனிதா ஆக்ஸ்பர்க் - ஜெர்மனி, 6. ஜேன் ஆடம்ஸ் - அமெரிக்கா, 7. யூஜெனி ஹானர், 8. அலெட்டா ஜேக்கப்ஸ் - நெதர்லாந்து, 9. கிறிஸ்டல் மேக்மில்லன் - யுகே, 10. ரோசா ஜெனோனி - இத்தாலி, 11. அன்னா கிளெமன் - சுவீடன், 12. தோரா தகார்ட் - டென்மார்க், 13. லூயிஸ் கெய்ல்ஹாவ் - நார்வே

1862 இல் கார்ல்ஸ்க்ரோனா எனற ஊரில் தளபதி கார்ல் கிளெமன் (1820-1872) மற்றும் ஜோகன்னா அகஸ்டா கிராம் (1825-1904) ஆகியோருக்கு அண்ணா சோபியா கிளெமன் என்ற பெயரில் பிறந்தார். இவரது தங்கை, எலன் கிளெமன் (1867-1943) என்பவரும் பெண்கள் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தார்.[3]

1895 வாக்கில், ஸ்டாக்ஹோமில் உள்ள துலே காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1903 முதல், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம், 1906 முதல் 1911 வரை, பெண்கள் அரசியல் உரிமைகளுக்கான சங்கத்திலும் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டில் நியா இடூன் என்ற பெண்கள் அமைப்பின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] பெண்களின் வாக்களிக்கும் உரிமையை ஆதரிப்பவராகவும் இருந்த இவர், 1911 ஸ்டாக்ஹோம் வாக்குரிமை மாநாட்டில் தீவிர பங்கேற்பாளராக ஆனார்.[2] ஹாக்கில் நடந்த மகளிர் அமைதி மாநாட்டிலும் (1915), சூரிக்கு (1919) அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் மாநாட்டிலும் பங்கேற்றார்.[1]

ஒரு எழுத்தாளராக, 1916 இல் இருந்து "பெண்களுக்கான வாக்களிக்கும் உரிமைகள்" என்ற இதழில் பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக கட்டுரைகளை வழங்கினார் [2]

1915 முதல் 1918 வரை அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான மகளிர் சர்வதேச அமைப்பின் சுவீடன் அத்தியாயத்தின் தலைவராக கிளெமன் ஒரு அமைதி ஆர்வலராக அதிகளவில் ஈடுபட்டார். 1925 ஆம் ஆண்டில், வாசிங்டன், டி. சி.யில் தேசிய பெண் வாக்குரிமை சங்கம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச பெண்கள் அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, பெண்கள் இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பத்திரிகையான ஹெர்தாவில் நடந்த விவாதங்களைப் பற்றி அறிக்கை செய்தார்.[2]

இறப்பு

தொகு

அன்னா கிளெமன் 1940 இல் ஸ்டாக்ஹோமில் இறந்தார்.[5]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Anna Kleman" (in Swedish). Göteborgs universitetsbibliotek. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Katta. "Anna Kleman – med engagemang i kvinnofrågor och fredsarbete" (in Swedish). Kulturlandskapetblekinge. Archived from the original on 7 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 16 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. Toijer-Nilsson, Ying. "Ellen E A Kleman" (in Swedish). Svensk biografiskt lexikon. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Anna Kleman" (in ஸ்வீடிஷ்). 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.
  5. "Kleman, släkter" (in Swedish). Riksarkivet: Svenskt biografiskt lexikon. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_கிளெமன்&oldid=3927098" இலிருந்து மீள்விக்கப்பட்டது