எலன் தாமசு

அமெரிக்க அமைதிச் செயற்பாட்டாளர்

எலன் தாமசு (Ellen Thomas) அமெரிக்காவைச் சேர்ந்த அமைதி ஆர்வலராவார். 1947 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாளன்று முதலில் வெள்ளை மாளிகை அமைதி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அமெரிக்க கடற்படை அதிகாரியின் மகளான தாமசு புரூக்ளின் நகரில் பிறந்தார் கலிபோர்னியாவில் வளர்ந்தார். சிறுவயது முதற்கொண்டே அணு ஆயுதங்களை இவர் எதிர்த்தார்.[1] அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரி கொடா போராட்டத்திலும் எலன் ஈடுபட்டார். [2]

எலன் தாமசு
Ellen Thomas
பிறப்புஎலன் தாமசு
சனவரி 24, 1947 (1947-01-24) (அகவை 77)
புரூக்ளின்
தேசியம்அமெரிக்கர்
பணிஅமைதி இயக்கச் செயற்பாட்டாளர்

மே 6, 1984 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளன்று எலன் பெஞ்சமின் தாமசு என்பவரை மதச்சார்பு நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு எலன் தாமசு ஆக மாறினார்.[3] எலன் தாமசும் இவரது கணவரும் பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை எதிர்த்து போராட்டம் நடத்தினர். 2009 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நுரையீரல் நோயால் பெஞ்சமின் தாமசு இறந்தார்.[4]

கதிர்வீச்சு அல்லாத அணுசக்தி அமைப்புக்கு எலன் தலைமை தாங்குகிறார். இவ்வமைப்பு ஒரு பயண பல்லூடகக் குழுவாகும். அணுசக்தியால் நிகழப்போகும் எதிர்காலத்தின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்குக் இவ்வமைப்பு கற்பிக்கிறது. 1993 ஆம் ஆண்டில் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான வெற்றிகரமான வாக்குச்சீட்டு முயற்சியை வாசிங்டனில் ஒருங்கிணைக்க எலன் உதவினார். முன்னதாக எலன் முறையாக வாசிங்டன் அமைதி மையத்தின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றினார். ஆனால் பின்னர் வட கரோலினாவுக்கு சென்றார். [5]

அல் யசீரா ஆவணப்பட்ட ஒளியலை நிறுவனம் தயாரித்த டிம் வில்கர்சனின் ஆவணப்படமான தி ஆரக்கிள்சு ஆஃப் பென்சில்வேனியா அவென்யூ வில்லியம் மற்றும் எலன் தாமசு, கான்செப்சியன் பிசியோட்டோ மற்றும் நார்மன் மேயர் ஆகிய அமைதி ஆர்வலர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. [6]

மேற்கோள்கள் தொகு

  1. Ellen Thomas
  2. Matt Hagengruber (July 9, 2000). "DC protest group stands test of time". KnightRidder. http://www.prop1.org/history/2000/000709kr.DC%20protest%20group%20stands%20test%20of%20time.htm. "I decided that when I didn't need to worry about providing for my daughter, I was going to reduce my income to below the poverty level so I wouldn't have to pay taxes, because I don't agree with the policies [of the U.S. government]" 
  3. Birth of a street person by Lloyd Grove
  4. http://www.afterdowningstreet.org/node/39316
  5. John Kelly (November 6, 2011), "For 30-year peace activist, a new battle", The Washington Post, Ellen, who moved to the mountains of North Carolina after his [her husband's] death
  6. The Oracles of Pennsylvania Avenue

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலன்_தாமசு&oldid=3792854" இலிருந்து மீள்விக்கப்பட்டது