எலாஸ் மாகாணம்

எலாஸ் மாகாணம் (Elazığ Province, துருக்கியம்: Elâzığ ili , திமிலி மொழி : Suke Xarpêt [2] Kurdish ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இதன் தலைநகராக எலாஸ் நகரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 568,753 ஆகும். மாகாணத்தின் மக்கள் தொகை 2000 இல் 569,616 ஆகவும் 1990 ல் 498,225 ஆகவும் இருந்தது. மாகாணத்தின் மொத்த பரப்பளவு 8,455 சதுர கிலோமீட்டர்கள் (3,264 sq mi), 826 km2 (319 sq mi) இந்த மாகாணத்தில் பல நீர்த்தேக்கங்களும், இயற்கை ஏரிகளும் உள்ளன. மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செடின் ஒக்டே கல்திரிம் என்பவர் ஆவார். [3]

எலாஸ் மாகாணம்
Elazığ ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் எலாஸ் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் எலாஸ் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிமாலத்யா
அரசு
 • தேர்தல் மாவட்டம்எலாஸ்
 • ஆளுநர்எர்கயா யரக்
பரப்பளவு
 • மொத்தம்8,455 km2 (3,264 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்5,95,638
 • அடர்த்தி70/km2 (180/sq mi)
தொலைபேசி குறியீடு00424
வாகனப் பதிவு23
இணையதளம்elazig.gov.tr

வரலாறு தொகு

1927 ஆம் ஆண்டில் இங்கு இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அலுவலகம் உருவாக்கப்பட்டது. இதன்படி இந்த மாகாணம் இராணுவச் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டது. [4] இன்ஸ்பெக்டர் ஜெனரல் உருவாக்கபட்டது முதல் இன்ஸ்பெக்டரேட் ஜெனரலில் ( உமுமி மெஃபெட்டிக்லிக், யுஎம்) இந்த மாகாணம் சேர்க்கபட்டதுடன், ஹக்கரி, சியர்ட், வான், மார்டின், பிட்லிஸ், சான்லூர்பா, எலாஜிக், தியர்பாகர் மாகாணங்களும் இணக்கபட்டன. [5] 1935 திசம்பரில், துன்செலி சட்டம் நிறைவேற்றப்பட்டது, இதன்படி பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கமாக ஆனது. [6] 1936 சனவரியில், எலாஸ் மாகாணம் புதிதாக நிறுவப்பட்ட நான்காவது இன்ஸ்பெக்டரேட் ஜெனரலின் அதிகாரத்தின் கீழ் மாற்றப்பட்டது. இது எல்சிக், எர்சின்கான், பிங்கால், துன்செலி மாகாணங்களைக் கொண்டதாக இருந்தது. இதன் தலைநகரமானது எலாசி நகரில் இருந்தது. [7] நான்காவது யுஎம் ஆளுநர்-தளபதியால் நிர்வகிக்கப்பட்டது. நகராட்சிகளில் இருந்த பெரும்பாலான ஊழியர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆளுநர்-தளபதிக்கு அனைத்து கிராம மக்களவையும் வெளியேற்றி மாகாணத்தின் மற்றொரு பகுதியில் மீள்குடியேற்ற அதிகாரம் கொண்டவராக இருந்தார். [8] 1946 ஆம் ஆண்டில் துன்செலி சட்டம் அகற்றப்பட்டு அவசரகால நிலை நீக்கப்பட்டது, என்றாலும் நான்காவது யுஎம் அதிகாரம் இராணுவத்திற்கு மாற்றப்பட்டது.

இன்ஸ்பெக்டரேட்டுகள் ஜெனரல்கள் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டன. [9]

2020, ஜனவரி 24 அன்று மாகாணத்தில் 6.7 ரிக்டர் அளவில் பெரிய பூகம்பம் ஏற்பட்டது . [10]

நிலவியல் தொகு

புறாத்து ஆற்றின் மூலம் இந்த மாகாணத்தில் அமைந்துள்ளது.

மாவட்டங்கள் தொகு

 
எலாஸ் மாவட்டங்கள்

எலாஸ் மாகாணம் 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அகின்
  • அலககயா
  • அர்காக்
  • பாஸ்கில்
  • எலாசோ
  • கரகோசான்
  • கெபன்
  • கோவன்சலார்
  • மேடன்
  • பாலு
  • சிவ்ரிஸ்

பொருளாதாரம் தொகு

வரலாற்று ரீதியாக, எலாஸ் மாகாணம் வெள்ளியை உற்பத்தி செய்தது, இது 1885 இல் வெட்டப்பட்டது. துருக்கிய அரசாங்கம் சுரங்கங்களை நவீனப்படுத்த முயன்றது; இருப்பினும், எரிபொருள் மற்றும் ஆற்றலின் விலை கட்டுபடியாகததால் சுரங்கம் மூடப்பட்டது. மாகாணத்தின் சில பகுதிகளில் நிலக்கரி காணப்படுகிறது. தங்கம், உப்பு ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. [11]

கல்வி தொகு

மாகாணத்தின் கல்வியை தேசிய கல்விக்கான எலாஸ் மாகாண இயக்குநரகம் வழங்குகிறது. இங்கு தற்போது முறை மற்றும் முறைசாரா கல்வி நிறுவனங்களாக 442 கல்வி நிறுவனங்கள் உள்ளளன. [12]

தொல்லியல் தொகு

அல்டினோவா, எலாசிக் என்பது அல்டோனோவா சமவெளியில் ஒரு முக்கியமான தொல்லியல் சிறப்புமிக்க இடமாகும், இது 1970 களில் அகழப்பட்டது. பின்னர் இது கெபன் அணை நீரில் மூழ்கியது. அல்டினோவா சமவெளியில் உள்ள மற்ற தளங்களாக டெபெசிக், கொருகுடீப், டெசிர்மென்டெப் மற்றும் கோர்டெப் ஆகியவை உள்ளன.

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
  2. Zazaca -Türkçe Sözlük, R. Hayıg-B. Werner
  3. "Elazığ Valisi Çetin Oktay KALDIRIM". www.elazig.gov.tr. Archived from the original on 2020-04-07. பார்க்கப்பட்ட நாள் 2020-04-08.
  4. Jongerden, Joost (1 January 2007) (in en). The Settlement Issue in Turkey and the Kurds: An Analysis of Spatical Policies, Modernity and War. BRILL. பக். 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15557-2. 
  5. Bayir, Derya (2016-04-22) (in en). Minorities and Nationalism in Turkish Law. Routledge. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-09579-8. 
  6. Cagaptay, Soner (2 May 2006) (in en). Islam, Secularism and Nationalism in Modern Turkey: Who is a Turk?. Routledge. பக். 108–110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-134-17448-5. 
  7. Soner Çaǧaptay, Islam, Secularism, and Nationalism in Modern Turkey: Who is a Turk?, Taylor & Francis, 2006, ISBN 978-0-415-38458-2, p. 48
  8. Bayir, Derya (2016-04-22) (in en). Minorities and Nationalism in Turkish Law. Routledge. பக். 139-141. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-09579-8. 
  9. Fleet, Kate (2008-04-17) (in en). The Cambridge History of Turkey. Cambridge University Press. பக். 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-62096-3. 
  10. "M 6.7 - 13km N of Doganyol, Turkey". earthquake.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
  11. Armenia and Kurdistan. http://www.wdl.org/en/item/11768/view/1/74/. 
  12. Solmaz, Remzi (2015-12-14). "Elazig City Department Of Education". EPALE - European Commission (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலாஸ்_மாகாணம்&oldid=3546072" இலிருந்து மீள்விக்கப்பட்டது