பிட்லிஸ் மாகாணம்

பிட்லிஸ் மாகாணம் (Bitlis Province, துருக்கியம்: Bitlis ili , Kurdish ) என்பது கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது வான் ஏரியின் மேற்கே அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் பெரும்பான்மை மக்களாக குர்திஷ் மக்கள் உள்ளனர். மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக ஓக்டே கேகேடே உள்ளார். [2]

பிட்லிஸ் மாகாணம்
Bitlis ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் பிட்லிஸ் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பிட்லிஸ் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதி[மையக்கிழக்கு அனதோலியா
துணைப்பகுதிவான்
அரசு
 • தேர்தல் மாவட்டம்பிட்லிஸ்
 • ஆளுநர்ஓக்டே கேகேடே
பரப்பளவு
 • மொத்தம்6,707 km2 (2,590 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்3,49,396
 • அடர்த்தி52/km2 (130/sq mi)
தொலைபேசி குறியீடு0434
வாகனப் பதிவு13

வரலாறுதொகு

பிட்லிஸ் 17 ஆம் நூற்றாண்டில் நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டது.[சான்று தேவை] மாகாணத்தின் நிர்வாக மையமாக பிட்லிஸ் நகரம் உள்ளது ( குர்தி மொழி : Bidlîs‎, , ஆர்மீனியன் : Բիթլիս), இது ஆர்மேனிய பழைய ஆவணங்களில் பாகேஷ் என்று அழைக்கப்பட்டது. [3]

1927 ஆம் ஆண்டில் இங்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் உருவாக்கப்பட்டது. அப்போது மாகாணமானது இராணுவச் சட்டத்தினால் நிர்வகிக்கப்பட்டது. [4] பிட்லிஸ் மாகாணம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பிராந்தியப் பகுதி உருவாக்கபட்ட பின்னர் அதனுடன் சேர்க்கபட்டது. அந்தப் பிராந்தியப் பகுதியில் ஹக்கரி, சியர்ட், வான், மார்டின், பிட்லிஸ், சான்லூர்பா, எலாஜிக், தியர்பாகர் ஆகிய மாகாணங்களின் பகுதிகள் இணைக்கபட்டிருந்தன . [5] இன்ஸ்பெக்டரேட் ஜெனரல் பிராந்தியம் 1952 இல் ஜனநாயகக் கட்சியின் அரசாங்கத்தின் போது கலைக்கப்பட்டது. [6]

மாவட்டங்கள்தொகு

பிட்லிஸ் மாகாணம் 7 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது.):

  • அடில்செவாஸ்
  • அஹ்லத்
  • பிட்லிஸ்
  • கோரோமக்
  • ஹிசான்
  • முட்கி
  • தத்வன்

பொருளாதாரம்தொகு

1920 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாகாணத்தில் இரும்பு, தாமிரம், ஈயம், கந்தகம் போன்றவை சிறிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. சிறிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி கூட சைர்ட் மற்றும் கைர்வான் பகுதிகளில் காணப்பட்டன. உப்பு மாகாணத்தின் மிகப்பெரிய கனிமத் தொழிலாக அமைந்துள்ளது. இதைச் சுற்றியுள்ள மாகாணங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உப்பைது தயாரிக்க ஆவியாதல் முறை பயன்படுத்தபட்டு, 8 முதல் 10 நாட்களில் முதிர்ச்சுயுறும். இதன் நுட்பமும் வர்த்தகமும் முக்கியமாக உள்ளூர் குர்துகளால் நடத்தப்படுகிறது .

காணத்தக்கவைதொகு

  • நெம்ருட் (எரிமலை)
  • நெம்ருட் ஏரி

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்லிஸ்_மாகாணம்&oldid=3070673" இருந்து மீள்விக்கப்பட்டது