எலிசபெத் ஹோலோவே மார்ஸ்டன்
சாரா எலிசபெத் மார்ஸ்டன் ( née ஹாலோவே; பிப்ரவரி 20, 1893 - மார்ச் 27, 1993) [1] ஒரு அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் உளவியலாளர் ஆவார். அவர் தனது கணவர் வில்லியம் மோல்டன் மார்ஸ்டனுடன் சேர்ந்து, ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் சிஸ்டாலிக் இரத்த அழுத்த அளவீட்டின் மேம்படுத்தலுக்காக அறியப்படுகிறார். இவர்களது கண்டுபிடிப்பானது பாலிகிராஃப்பின் முன்னோடியாகும். [2] [3]
இவர் தனது கணவரின் நகைச்சுவைப் படைப்பான வொண்டர் வுமன் புத்தகத்திற்கு உத்வேகம் அளித்தவர். வொண்டர் வுமன் பாத்திரம், இவர்களின் வாழ்க்கைத்துணையான ஆலிவ் பைரன் சார்ந்து வடிவமைக்கப்பட்ட ஒரு கதா பாத்திரம் ஆகும். [2] [4] [5] [6]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுவில்லியம் ஜார்ஜ் வாஷிங்டன் ஹோலோவே (பிப்ரவரி 13, 1961) ஒரு அமெரிக்க வங்கி எழுத்தர் மற்றும் அவரது மனைவி டெய்சி ( டி கவுன்சா; ஜூலை 19, 1945 இல் இறந்தார்) ஆகியோருக்கு மார்ஸ்டன் சாரா எலிசபெத் ஹோலோவே மாண் தீவில் பிறந்தார். இவரது பெர்றோரின் திருமணம் 1892 இல் இங்கிலாந்தில் நடந்தது. இவரது குடும்பம் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு, சாரா மாசசூசெட்ஸின் பாஸ்டனில் வளர்ந்தார். இவருடைய புனைப்பெயர் "சாடி". தனது முன்பெயரான சாராவை நிராகரித்துவிட்டு, நடுப்பெயரான "எலிசபெத்தை" விரும்பி வைத்துக் கொண்டார். [6]
தொழில் மற்றும் குடும்பம்
தொகுமார்ஸ்டன் 1915 இல் மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்;[2] 1918 இல் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் லாவில் தனது எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.[7] [8] [6] அந்த ஆண்டு சட்டப் பள்ளியில் பட்டம் பெற்ற மூன்று பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். [2]
மார்ஸ்டன் 1915 இல் வில்லியம் மௌல்டன் மார்ஸ்டனை மணந்தார். அவர் தனது முதல் குழந்தையை 35 வயதில் பெற்றெடுத்தார். பின்னர் வேலைக்குத் திரும்பினார். இவரது நீண்ட மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கையில், முதல் பதினான்கு ஆண்டுகள் ஐக்கிய அமெரிக்கப் பேரவையின் ஆவணங்களை அட்டவணைப்படுத்தினார். பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சட்டம், நெறிமுறைகள் மற்றும் உளவியல் பற்றி விரிவுரை செய்தார். மேலும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மற்றும் மெக்கால்ஸின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் தனது கணவர் மற்றும் சி. டேலி கிங்குடன் ஒருங்கிணைந்த உளவியல் என்ற பாடப்புத்தகத்தை எழுதினார். 1933 ஆம் ஆண்டில், அவர் மெட்ரோபொலிட்டன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியின் உதவியாளரானார். [2] [9]
1920 களின் பிற்பகுதியில், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் போது வில்லியம் சந்தித்த இளம் பெண் ஆலிவ் பைர்ன் வீட்டில் சேர்ந்தார். எலிசபெத் மார்ஸ்டனுக்கு பீட்டர் மற்றும் ஆலிவ் ஆன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர், அதே நேரத்தில் ஆலிவ் பைர்ன் வில்லியமின் இரண்டு குழந்தைகளான பைர்ன் மற்றும் டான் ஆகியோரைப் பெற்றெடுத்தார். மார்ஸ்டன்கள் ஆலிவ் பெற்ற இரு குழந்தைகளையும் சட்டப்பூர்வமாகத் தத்தெடுத்தனர், மேலும் ஆலிவ் 1947 இல் வில்லியம் இறந்த பிறகும் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே இருந்தார். [2] [10]
மார்ஸ்டன் பணியாற்றியபோது ஆலிவ் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அறுபத்தைந்து வயது வரை மெட்லைஃப்பில் தொடர்ந்து பணியாற்றிய எலிசபெத், நான்கு குழந்தைகளுக்கும் கல்லூரி படிப்புவரை நிதியுதவி அளித்தார். பைர்னை மருத்துவப் பள்ளியிலும், டான் சட்டப் பள்ளியிலும் பயின்றனர். 1990 ஆம் ஆண்டு ஆலிவ் இறக்கும் வரை எலிசபெத்தும் ஆலிவும் ஒன்றாக வாழ்ந்தனர் [2] [10] ஆலிவ் மற்றும் மார்ஸ்டன் இருவரும் அன்றைய பெண்ணியத்தை கடைப்பிடித்தவர்கள் என்று கூறப்படுகிறது. [11]
சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனை
தொகுஇவரது கணவர் வில்லியம் ஹார்வர்டில் உளவியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பைப் பயின்றபோது, மார்ஸ்டன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார், அந்தக் காலத்தில் அக்கல்லூரி ஆண் மாணவர்களை மட்டுமே சேர்த்தது. இவர் வில்லியமுடன் அவரது ஆய்வறிக்கையில் பணிபுரிந்தார். இது இரத்த அழுத்த அளவுகளுக்கும் ஏமாற்றத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியது. பின்னர் வில்லியம் சிஸ்டாலிக் இரத்த அழுத்த சோதனையை உருவாக்கினார், இது பாலிகிராஃப் சோதனைக்கு முன்னோடியாக ஏமாற்றத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டது. [2]
1921 ஆம் ஆண்டில், மார்ஸ்டன் ராட்கிளிஃபில் தனது முதுகலை பட்டம் பெற்றார். மேலும் வில்லியம் ஹார்வர்டில் தனது முனைவர் பட்டம் பெற்றார். மார்ஸ்டன் தனது ஆரம்பகால படைப்புகளில் வில்லியமின் ஒத்துழைப்பாளராக பட்டியலிடப்படவில்லை என்றாலும், பல எழுத்தாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இவரது கணவரின் இரத்த அழுத்தம்/ஏமாற்ற ஆராய்ச்சி பற்றிய பணியில் எலிசபெத்தின் உதவியை குறிப்பிடுகின்றனர். வில்லியமின் பாலிகிராஃப் ஆய்வகத்தில் 1920 களில் எடுக்கப்பட்டு, 1938 ஆம் ஆண்டு வெளியானதொரு படத்தில் மார்ஸ்டன் காணப்படுகிறார்.[2] [12] [13]
இறப்பு
தொகுமார்ஸ்டன் தனது 100 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு மார்ச் 27, 1993 அன்று இறந்தார். [14]
சான்றுகள்
தொகு- ↑ New England Historical Society
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Lamb, Marguerite. "Who Was Wonder Woman? Long-Ago LAW Alumna Elizabeth Marston Was the Muse Who Gave Us a Superheroine", Boston University Alumni Magazine, Fall 2001.
- ↑ Comm. to Review the Scientific Evidence on the Polygraph, Nat'l Research Council. The Polygraph and Lie Detection (2003).
- ↑ Marston, Christie (October 20, 2017). "What 'Professor Marston' Misses About Wonder Woman's Origins (Guest Column)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் October 21, 2017.
- ↑ "Alumni Spotlight: Elizabeth Holloway Marston (LAW '18)"
- ↑ 6.0 6.1 6.2 Malcolm, Andrew H. "OUR TOWNS; She's Behind the Match For That Man of Steel". The New York Times, February 18, 1992.
- ↑ "THE LAST AMAZON Wonder Woman returns", New Yorker, September 22, 2014.
- ↑ Green, Hope. "Panel Recognizes Astral Advances of Women in Law", B.U. Bridge, vol 5, #31, April 19, 2002.
- ↑ Marston, Christie (October 20, 2017). "What 'Professor Marston' Misses About Wonder Woman's Origins (Guest Column)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் October 21, 2017.Marston, Christie (October 20, 2017). "What 'Professor Marston' Misses About Wonder Woman's Origins (Guest Column)". The Hollywood Reporter. Retrieved October 21, 2017.
- ↑ 10.0 10.1 Marston, Christie (October 20, 2017). "What 'Professor Marston' Misses About Wonder Woman's Origins (Guest Column)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் October 21, 2017.Marston, Christie (October 20, 2017). "What 'Professor Marston' Misses About Wonder Woman's Origins (Guest Column)". The Hollywood Reporter. Retrieved October 21, 2017.
- ↑ Tim Hanley, Wonder Woman Unbound: The Curious History of the World's Most Famous Heroine, Chicago Review Press, 2014, pg. 12.
- ↑ Marston, William Moulton. The Lie Detector Test (1938).
- ↑ The Polygraph and Lie Detection (2003): Chapter: Appendix E: Historical Notes on the Modern Polygraph, nap.edu; accessed March 27, 2018.
- ↑ D'Alessandro, Anthony (September 15, 2017). "Annapurna To Release MGM's 'Death Wish' Over Thanksgiving; Sets October Date For 'Professor Marston & The Wonder Women'". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் September 15, 2017.