எலும்பு மெழுகு
எலும்பு மெழுகு (bone wax) அறுவை சிகிச்சையின் போது எலும்புகளில் இருந்து இரத்தம் கசிவதைத் தவிர்க்க உதவுகிறது. இது தேனீ மெழுகால் (bee's wax) செய்யப்படுகிறது. ஐசோ புரப்பைல் பால்மிடேட், பாரஃபின் (paraffin) போன்ற மிருதுவாக்கிகளை (softening agent) உள்ளடக்கியது. இதைக் குருதி கசியும் எலும்பு முனையில் அழுத்தித் தேய்க்கும் போது இது இரத்தக்கசிவை நிறுத்துகிறது.[1]
பக்க விளைவுகள்
தொகு- நோய்த்தொற்று (infection)
- எலும்பு கூடாமை (non-union)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Infection rates and healing using bone wax and a soluble polymer material". Clin. Orthop. Relat. Res. 466 (2): 481–6. February 2008. doi:10.1007/s11999-007-0067-5. பப்மெட்:18196435.