எலும்பொட்டி

Ormocarpum cochinchinense
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Ormocarpum cochinchinense
இருசொற் பெயரீடு
Ormocarpum cochinchinense
(Lour.)Merr.
வேறு பெயர்கள்

Parkinsonia orientalis Spreng.
Ormocarpum orientale (Spreng.)Merr.
Ormocarpum glabrum Teijsm. & Binn.
Diphaea cochinchinense Lour.
Diphaca cochinchinensis Lour.
Diphaca cochinchinense Lour.
Dalbergia diphaca Pers.

எலும்பொட்டி (Ormocarpum cochinchinense) என்பது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். இதன் விஞ்ஞானப் பெயர் ஒர்மோகர்பம் கொசிசைனிஸ் என்பதாகும். இது பபசியே (FABACEAE) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இது செடி வகையைச் சேர்ந்தது. இது தாய்வான், இந்தியா, ஜப்பான், மலேசியா, பசிபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, சீனா மற்றும் வியட்னாமில் காணப்படுகின்றது.

விளக்கம்

தொகு

இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும். இது 6 அடி முதல் 9 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். அவை 9 – 17 இணுக்குகள் இருக்கும். இலை 1.5 சி எம்.முதல் 2.5 சி.எம் நீளம் இருக்கும். இவைகள் முதிர்ந்து பழுத்தால் கருப்பாக இருக்கும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கல்சியம் அதிகமாக இருக்கும்[சான்று தேவை]. விதைகள் நீள்வட்ட வடிவத்தில் மண்ணிறத்தில் இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். இது விதை மூலம் இனவிருத்தி செய்யும்.

வளரும் இயல்பு

தொகு

எலும்பொட்டி வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோசணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெரிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர்.[சான்று தேவை]

மருத்துவப் பயன்கள் [சான்று தேவை]

தொகு

எலும்பொட்டி செடியில் கல்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டறிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர் [சான்று தேவை]. இதை இரகசியமாக வவைத்திருந்தனர். இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி [சான்று தேவை], அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள். பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேரளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்[சான்று தேவை].

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலும்பொட்டி&oldid=4102253" இலிருந்து மீள்விக்கப்பட்டது