எலெனா பௌதோவா
எலெனா பௌதோவா (Elena Pautova) (பிறப்பு: 1986 சனவரி 22) இவர் உருசியாவைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் விளையாட்டின் தடகள வீரராவார். முக்கியமாக டி 12 வகை நடுத்தர தூர நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு முறை இணை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். மூன்று முறை உலகப் போட்டிகளைல் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 2003 இல் நடந்த டி 13 5000 மீ போட்டியில் உலக சாதனையையும் இவர் முறியடித்தார்.
2013 சர்வதேச மாற்றுத் திறனாளி தடகள உலகப் போட்டிகளில் எலெனா | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | உருசியர் |
பிறப்பு | 22 சனவரி 1986 அட்லெர் உருசியா |
விளையாட்டு | |
விளையாட்டு | தடகளம் |
மாற்றுத்திறன் வகைப்பாடு | டி12 வகை |
நிகழ்வு(கள்) | 800மீட்டர் பிரிவு 1500மீட்டர் பிரிவு |
பயிற்றுவித்தது | பியோட்ர் பைலோவ் |
வாழ்க்கை வரலாறு
தொகுபார்வைக் குறைபாடுள்ள இவர், உருசியாவின் அர்மாவிர் என்ற இடத்திலுள்ள ஒரு சிறப்பு உறைவிடப் பள்ளியில் பயின்றபோது முதலில் தடகளதை நோக்கி ஈர்க்கப்பட்டார். [1] இவர் இளம்வயதிலேயே போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இவர் நடுத்தர மற்றும் நீண்ட தூர நிகழ்வுகளில் போட்டியிட்டார். தனது 17 வயதில் கனடாவின் கியூபெக்கில் நடந்த ஒரு சர்வதேசப் போட்டியில் டி 13 5000 மீ. போட்டியில் கலந்து கொண்டார். அங்கு இவர் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நேரத்தை 17: 50.45 என்ற புதிய உலக சாதனையை வெளியிட்டார். [2] முக்கிய போட்டிகளில் உத்தியோகபூர்வ டி13 5000 மீ பந்தயங்களின் அரிதான தன்மை காரணமாக, 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவரது சாதனை இன்னும் அப்படியே உள்ளது. பின்னர் இவர், நடுத்தர தூர நிகழ்வுகளுக்கு மாறினார். மேலும் 18 வயதில் தனது முதல் இணை ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டார். 2004 ஏதென்ஸில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் உருசியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார். இது இவருக்கு மிகவும் வெற்றிகரமான போட்டியாக இருந்தது. டி 12 1500 மீட்டரில் தங்கப் பதக்கத்தையும், டி 12 800 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுத் தந்தது.
சர்வதேச தடகள போட்டிகள்
தொகு2006 ஆம் ஆண்டில், இவர் அசெனுக்குச் சென்றார். அங்கு இவர் சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்றார் . அங்கு இவர் 800மீ, மற்றும் 1,500 மீ ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்குள் நுழைந்தார். ஏதென்ஸில் பெற்ற அதே மாதிரியான முடிவை அளித்தார்; 1,500 மீட்டரில் ஒரு தங்கமும், 800 மீட்டரில் வெண்கலமும் வென்றார். சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த 2008 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சென்ற இவர், டி 13 1500 மீட்டரிலும், கூட்டு வகைப்படுத்தப்பட்ட டி 12/13 800 மீட்டர் ஓட்டத்திலிலும் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்றார்.
இணை ஒலிம்பிக் போட்டிகள்
தொகு2011 ஆம் ஆண்டில், 1,500 மீட்டர் ஓட்டத்தில் தனது உலக பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் நகரில் நடந்த 2011 சர்வதேச மாற்றுத் திறனாளி தடகள உலகப் போட்டிகளில் வெற்றிகரமாக முடித்தார். பின்னர் 2012 இலண்டன் இணை ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, ஸ்டாட்ஸ்கனலில் நடந்த 2012 ஐரோப்பியப் போட்டிகளில் 1,500 மீ.ஓட்டத்தில் தங்கம் வென்றார். இலண்டனில் அவர் தனது அடுத்த போட்டியாளரான எசுப்பானியாவின் எலெனா காங்கோஸ்டை தோற்கடித்து 4: 37.65 என்ற பருவத்தின் சிறந்த போட்டியை ஏழு வினாடிகளில் தனது இரண்டாவது இணை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றார். இலண்டனில் பெற்ற தனது வெற்றிக்குப் பின்னர், இவருக்கு ஆர்டர் ஆப் ஹானர் என்ற கௌரவம் வழங்கப்பட்டது. மேலும் கிரெம்லினில் நடைபெற்ற விழாவில் இவருக்கு உருசிய அதிபர் விளாடிமிர் புதின் வழங்கினார். [1]
2013 ஆம் ஆண்டில் லியோனில் நடந்த 2013 சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள உலகப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தனது மூன்றாவது தங்கத்தை வென்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Pautova, Elena". ipc.infostradasports.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
- ↑ "IPC Athletics World Records". paralympic.org. p. 2. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.